• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • கொதிக்கும் எண்ணெயில் அசால்ட்டாக கைவிட்டு சிக்கனை பொரித்தெடுக்கும் நபர்... வைரல் வீடியோ!

கொதிக்கும் எண்ணெயில் அசால்ட்டாக கைவிட்டு சிக்கனை பொரித்தெடுக்கும் நபர்... வைரல் வீடியோ!

சிக்கனை சமைக்கும் வீடியோ

சிக்கனை சமைக்கும் வீடியோ

Viral Video : வடமாநில சிக்கன் வியாபாரி ஒருவர் எண்ணெய்யில் சாதாரணமாக கைவிட்டு சிக்கனை சமைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

  • Share this:
இணையத்தில் பல எண்ணற்ற வினோத வீடியோக்கள் வைரலாவதுண்டு. அவற்றை காணும் போது இப்படிகூடவா செய்வார்கள் என்று யோசிக்க தோன்றும். அதேபோல, சிலர் சமைக்கும் போது சில சாகசங்களை நிகழ்த்துவார்கள். அந்த வகையில் வடமாநில சிக்கன் வியாபாரி ஒருவர் எண்ணெய்யில் சாதாரணமாக கைவிட்டு சிக்கனை சமைக்கும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.

அந்த வீடியோவில் சிக்கன் கடை ஒன்றில் முழு கோழியை சமைக்கும் நபர் ஒருவர், கொதிக்கும் எண்ணெய்யில் தன் கைவிரல்களை விட்டு பின்னர் எடுக்கிறார். மசாலா தடவப்பட்ட முழுக்கோழியை எண்ணெயில் போட்ட பிறகு, தன் கைகளாலேயே கொதிக்கும் எண்ணெயில் இருந்து பொரித்த கோழியை வெளியே எடுக்கிறார். அதனை மசாலா தடவி வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறார். எண்ணெயில் கை விடும்போது அவரது விரல்களுக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @nonvegfoodie என்ற பக்கம் பதிவேற்றியுள்ளது. இந்த வீடியோக்கள் யூடியூபிலும் பகிரப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் "கை எரியவில்லையா? பொரித்த கோழியை எடுக்க கொதிக்கும் சூடான எண்ணெயில் கையை விட்ட நபர்'' என கேப்ஷன் செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவம் எந்த பகுதியில் நிகழ்ந்தது என்று தெரியவில்லை என்றாலும், ஒரு பயனரின் கூற்றுப்படி, அந்த வீடியோ அலி சிக்கன் ஸ்டாலில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.



தற்போது இந்த வீடியோ 59,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பல கருத்துகளையும் குவித்து வருகிறது. அவரது திறமையைக் கண்டு வியந்த ஒரு ட்விட்டர் யூசர் எழுதியிருந்ததாவது, ''அவர் என்ன!!! இரும்பு மனிதரா ?😀 அவர் உருகவே இல்லை 😂 அவர் செய்வது ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது!!!!'' என்று குறிப்பிட்டிருந்தார். மற்றொருவர் யூசர், ''ரியல் லைஃப் அயர்ன் மேன்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

 



இருப்பினும், இந்த வீடியோ சில எதிர்மறை விமர்சனங்களையும் பெற்றிருந்ததது. பலர் அந்த வீடியோவில் வரும் நபரால் பெரிதும் ஈர்க்கப்படவில்லை. சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து விமர்சனம் செய்திருந்தனர். மேலும் இந்த வீடியோவில் கமெண்ட் செய்திருந்த ஒரு யூசர், வீடியோ ஸ்டண்டின் பின்னணியில் உள்ள தர்க்கத்தை விளக்கினார். அதில், ''முதலில் அந்த நபர் தனது கைகளை தண்ணீரில் நனைப்பார்.. பிறகு கொதிக்கும் எண்ணெயில் அவரால் எளிதில் கைவிட முடியும்... இயற்கையாகவே சூடான எண்ணெய்யில் தண்ணீர் கையுடன் வைத்தால் அவரது தோல் எரிவதற்கு நேரம் எடுக்கும். இது நீர் அணுக்களை உடைக்கும் எதிர்வினை செயலாகும்.'' என்று தெரிவித்தார்.

 



மற்றொரு யூசர் கருத்து தெரிவிக்கையில், "பொரித்த கோழி + அவரது கரைந்த தோல், அவரது நகம், அதில் உள்ள வியர்வை சுரப்பிகள் மற்றும் நுண்ணிய இரத்த நாளங்கள்... அப்படியானால் அவரது பொரித்த கோழிக்கு அதிக மதிப்பு இருக்கிறது?" என்று சுகாதார சீர்கேட்டினை நகைச்சுவையாக பதிவு செய்திருந்தார். அந்த நபர் சேயும் செயல் காண்போரை ஈர்த்தாலும், சுகாதாரம் என்று வரும் போது, இதுபோன்ற செயல் தவிர்க்க வேண்டியவையே. அதேபோல ஒருவரின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: