ஆவேசமாக விரட்டிய ஒட்டகம்... சாமர்த்தியமாக தப்பித்த ஐடியா மணி...! - வைரல் வீடியோ

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர்.

Vijay R | news18-tamil
Updated: September 10, 2019, 7:58 PM IST
ஆவேசமாக விரட்டிய ஒட்டகம்... சாமர்த்தியமாக தப்பித்த ஐடியா மணி...! - வைரல் வீடியோ
வீடியோ காட்சி
Vijay R | news18-tamil
Updated: September 10, 2019, 7:58 PM IST
நாம் அனைவருக்கும் முயல், ஆமை ஓட்டப்பந்தயம் கதை தெரிந்த ஒன்று தான். அதுப்போன்ற ஒரு பந்தயம் தான் இதுவும், ஆனால் மனிதனுக்கும் ஒட்டகத்துக்கும் நடக்கும் பந்தயத்தில் புத்திசாலித்தனமாக யார் வெல்கிறார்கள் என்று இந்த வீடியோ மூலம் தெரியவரும்.

ஒட்டகம் ஒன்று கோபத்துடன் ஒருவரை விரட்டி விரட்டி செல்கிறது. உயிருக்கு பயந்த அவர் ஒரு காரை சுற்றி சுற்றி வருகிறார். ஆனால் ஓட்டகமும் அவரை விடாமல் துரத்தி வருகிறது. ஒரு கட்டத்தில் அவர் தனது சாதுர்ய செயல் மூலம் அந்த ஒட்டகத்திடமிருந்து தப்பி விடுகிறார்.

காரைச் சுற்றி சுற்றி வரும் அந்த நபர் ஒரு கட்டத்தில் அந்தக் காருக்குள் சென்று ஒளிந்து கொள்கிறார். ஆனால் அந்த ஒட்டகம் மட்டும் துரத்தி வருவதை விடவில்லை. பின்னர் தான் அந்த ஒட்டகத்திற்கு அந்த நபர் தன்னிடமிருந்து தப்பிட்டு விட்டதை உணர்ந்து அங்கிருந்து செல்கிறது.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சுமார் 5 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். ஒட்டகத்திடமிருந்து சாதுர்யமாக தப்பும் அந்த நபரையும், துரத்தி வந்தவரை தேடி தேடி சுற்றும் ஒட்டகத்தையும் பார்க்கும் போது யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது.

Also Watch

Loading...

First published: September 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...