ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள டோல்கேட் ஒன்றில் பணம் செலுத்தாமல் வேகமாக சென்ற லாரியை நிறுத்த லாரியின் பம்பர் மீது டோல்கேட் ஊழியர் ஏறிய சம்பவம் நடைபெற்றது .
ஆனால் லாரி டிரைவர் பம்பர் மீது நின்றுகொண்டிருந்த ஊழியருடன் சுமார் பத்து கிலோமீட்டர் தூரம் லாரியை வேகமாக ஓட்டி சென்றார்.
ஆந்திர மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அமக்கதாடு வழியாக சென்று கொண்டிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த லாரி தேசிய நெடுஞ்சாலையில் குத்தி சமீபத்தில் அமைந்திருக்கும் டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் கடந்து சென்றது. இதனை கவனித்த டோல்கேட் ஊழியர் சீனிவாசலு லாரியின் முன் பக்கம் இருக்கும் பம்பர் மீது ஏறி அதனை நிறுத்த முயன்றார்.
Also Read : செவிலியர் கையிலிருந்து தவறி விழுந்த பிறந்த குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு!
ஆனால் லாரி டிரைவர் அந்த ஊழியரையும் பொருட்படுத்தாமல் லாரியை வேகமாக ஓட்டி சென்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த டோல்கேட்டில் பணியாற்றும் மற்ற ஊழியர்கள் தங்களுடைய மோட்டார் சைக்கிளில் அந்த லாரியை தொடர்ந்து சென்றனர். லாரி வேகமாக சென்று கொண்டிருந்ததால் உடனடியாக தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில்
டோல்கேட்டில் பணம் செலுத்தாமல் சென்ற லாரியை நிறுத்த பம்பர் மீது ஏறிய டோல்கேட் ஊழியர் .அதனை கண்டுகொள்ளாமல் 10 கிலோ மீட்டர் தூரம் லாரியை ஓட்டிச் சென்ற டிரைவரால் பரபரப்பு pic.twitter.com/HpDXb005hM
— Vijay (@vijay_journo) April 27, 2022
இந்த சம்பவம் தொடர்பாக தகவலறிந்து விரைந்த போலீசார் லாரியை மடக்கி அந்த ஊழியரை மீட்டனர். லாரி டிரைவரை கைது செய்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்துகின்றனர்.இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Trending Video, Viral Video