• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • என்ன தம்பி என்ன ஆச்சு... தன்னை காப்பாற்ற வந்தவரை பயமுறுத்திய ராஜ நாகம் - வைரலாகும் வீடியோ

என்ன தம்பி என்ன ஆச்சு... தன்னை காப்பாற்ற வந்தவரை பயமுறுத்திய ராஜ நாகம் - வைரலாகும் வீடியோ

 ராஜ நாகம்

ராஜ நாகம்

பாம்பினை பிடித்துச் செல்ல வந்த பாம்பு பிடிப்பவரை ராஜநாகம் ஒன்று பயமுறுத்திய செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பர். இது பாம்பாட்டிகளுக்கும் , பாம்பு பிடிப்பவர்களுக்கும் பொருந்தாது என எண்ணி வந்த நிலையில் தன்னை காப்பாற்ற வந்த பாம்பு பிடிப்பவரை பயப்பட வைத்த ராஜநாகம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான பர்வீன் கஸ்வான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    அதில், வீட்டின் உள்ளே புகுந்த ராஜநாகத்தை காப்பாற்ற பாம்பு பிடிப்பவர் அதற்கான ஆயுதத்தை வைத்து முயற்சிக்கின்றார். பாம்பு வீட்டின் உள்ளே செல்ல முயற்சிக்கின்றது. இதனை கண்ட அவர் உடனே அதன் வாலை பிடித்து இழுக்க முயற்ச்சிக்கிறார். உடனே பின்னர் திரும்பிய பாம்பு மேலும்பி தன்னை பிடிக்க வந்தவரை நோக்கி படமெடுத்தது.

    என்ன தம்பி என்ன ஆச்சு என்பன போல் விருட்டென வந்ததில் பாம்பு பிடிக்க வந்தவர் ஒரு நொடியில் தனது கையில் வைத்திருந்த குச்சியை கீழே போட்டு விட்டு அட்டென்ஷன் நிலைக்கு சென்று விட்டார்.  இறுதியில் பாம்பு அருகில் இருந்த தோட்டத்திற்குள் சென்றது. பாம்பு பிடிக்க வந்தவர் பாம்பினை பையில் பிடித்துச் சென்று விட்டார்.



    இந்த வீடியோவை இதுவரை 2,489 பேர் ரீ ட்வீட் செய்துள்ளனர். 14.1K லைக்ஸ்களை பெற்றுள்ளது. இந்த வீடியோவின் கீழ் தமிழ்நாட்டில் பாம்பினை விரட்டுவது மிக எளிதான ஒன்று என ஒருவர் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் உனக்கு பாலும் முட்டையும் ஊத்துறோம் இப்ப போயிரு என பாம்புடன் டீல் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.



    மற்றொருவர் பதிவிட்டுள்ளார் பாம்பு பிடிப்பதில் மிகச்சிறந்த வீடியோ இது தான் என்று . அதில் ஒருவர் பாம்பை பிடித்து தனது வேட்டிக்குள் போட்டு வேட்டியை கட்டிவிட்டு இயல்பாக நடந்து சென்றார்.



    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: