Home /News /trend /

தண்ணீரில் ஆக்ரோஷமாக சண்டையிடும் ராஜநாகம் Vs மலைப்பாம்பு ... வெற்றி யாருக்கு? - வைரலாகும் வீடியோ

தண்ணீரில் ஆக்ரோஷமாக சண்டையிடும் ராஜநாகம் Vs மலைப்பாம்பு ... வெற்றி யாருக்கு? - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : படுகாயம் அடைந்த மலைப்பாம்பு தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியது. இறுதியில், இரண்டு பாம்புகளும் வெவ்வேறு திசைகளில் சென்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    ராஜநாகம் மற்றும் மலைப்பாம்பு இரண்டும் தண்ணீரில் சண்டையிடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    பாம்புகள் சண்டையிடும் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி மீண்டும் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ கடந்த ஆண்டு யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டு இதுவரை 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. 4 நிமிட வீடியோவில், இரண்டு பெரிய பாம்புகள் நீர் நிறைந்த நிலத்தில் கடுமையாக சண்டையிடுவதைக் காண முடிந்தது.

    அந்த வீடியோவில் மலைப்பாம்பு புதருக்குள் சண்டையிட்டு நாகபாம்பினை தன் பக்கம் இழுக்க முயற்சி செய்தது. ஒரு கட்டத்தில் இரண்டு பாம்புகளும் ஆக்ரோசம் அடைந்து ஒவ்வொன்றும் மாறி மாறி தாக்கிக் கொண்டது. ராஜநாகம் மலைப்பாம்பை பலமுறை கடித்தது. படுகாயம் அடைந்த மலைப்பாம்பு தனது தோல்வியை ஏற்றுக்கொண்டு அங்கிருந்து வெளியேறியது.

     



    இறுதியில், இரண்டு பாம்புகளும் வெவ்வேறு திசைகளில் சென்றன. இந்த வீடியோ கடந்த ஆண்டு வெளியானது. எனினும் தற்போது அதிகம் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது. இதுவரை இந்த வீடியோவை 6,049,091 பேர் பார்த்துள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Videos

    அடுத்த செய்தி