மணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்... ஷாக்கான மணமக்கள் - வீடியோ

மணமேடையில் மறக்க முடியாத கிஃப்ட் கொடுத்த நண்பர்கள்... ஷாக்கான மணமக்கள் - வீடியோ
  • Share this:
திருமணத்தின் போது வாழ்நாளில் மறக்க முடியாத கிஃப்ட் ஒன்றை நண்பர்கள் மணமக்களுக்கு கொடுத்த வீடியோ சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

திருமணத்திற்கு வரும் நண்பர்கள் செய்யும் கேலிக்கும் கிண்டலுக்கும் அளவே கிடையாது என்றே சொல்லலாம். என்ன குட்டி கலாட்டா செய்யலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள். சில நண்பர்கள் சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தும் அசத்துவார்கள். ஆனால் இந்த வீடியோவில் உள்ள நண்பர்கள் கொடுத்த கிஃப்டை பார்த்த மணமக்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.

மணமேடையில் நண்பர்கள் சேர்ந்து மணமக்களுக்கு பெரிய சைஸ் கிப்ட் ஒன்றை கொடுக்கின்றனர். ஆவலுடன் அதில் என்ன இருக்கிறது என்று மணமக்கள் பிரித்து பார்க்கின்றனர். அதில் வடிவேலு டவுசர் பாக்கெட்டில் ஒன்னும் இல்லையே என்று எடுத்துக்காட்டும் நகைச்சுவையான புகைப்படம் இடம்பெற்றுள்ளது.

நண்பர்களின் இந்த கிஃப்டை பார்த்த மணமக்களுக்கு ஏமாற்றம் அடைந்தனர். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலர் பார்த்து லைக்ஸ் மற்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Also see:


 
First published: January 16, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading