பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு ஒரு கிஃப்ட் இந்த வீடியோ..!

பெண் குழந்தைகளை பெற்ற அப்பாக்களுக்கு ஒரு கிஃப்ட் இந்த வீடியோ..!
  • Share this:
"எனக்கு எல்லாமே அம்மா தான் செய்வாங்க ஆனா எனக்கு அப்பா தான் பிடிக்கும்" என்று சிறுமி செல்லமாக சொல்லும் வீடியோ அனைவரது மனதையும் வென்றுள்ளது.

பெண் குழந்தை அப்பாகளுக்கு மற்றொரு அம்மா என்றும், பெற்றெடுத்த அம்மாக்களுக்கு மற்றொரு மாமியார் என்று கேலியாக சொல்வார்கள். பெண் குழந்தைகளின் செயலும் அதற்கேற்றார் போன்றே இருக்கும்.

அம்மாவிடம் குறும்பாகவும், அப்பாவிடம் செல்லமாகவும் இருப்பது பெண் குழந்தைகளின் சுபாவமாக உள்ளது. இந்த வீடியோவில் இருக்கும் பெண் குழந்தையும் அம்மாவை விட அப்பாவிடம் பாசமாக இருப்பதை அழகாக சொல்கிறது.


சிறுமி ஒருவரிடம் உனக்கு உணவு ஊட்டுவது, குளிக்க வைப்பது, வெளியே அழைத்து சொல்வது, பொம்மையை கெடுப்பது யார்..? என்று கேள்வி கேட்கிறார்கள். அதற்கு அந்த குழந்தை இது எல்லாமே எனக்கு அம்மா தான் செய்வார்கள். கடைசியாக உனக்கு யாரை பிடிக்கும் என்ற கேள்விக்கும் மட்டும் அப்பா என்று சொல்கிறது.பெண் குழந்தைகளை பெற்ற அப்பாகளுக்கு இந்த வீடியோ ஒரு கிஃப்ட் போன்றே இருக்கும். மழலையாக பேசும் இந்த சிறுமியின் வீடியோ இணையத்தில் அதிகம் பேர் பகிர்ந்து வருகின்றனர்.
First published: January 4, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்