• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • யார் பெற்ற மகனோ பின்னணி இசையில் கலங்க வைக்கும் வீடியோ! தன்னம்பிக்கை தரும் இளைஞர்

யார் பெற்ற மகனோ பின்னணி இசையில் கலங்க வைக்கும் வீடியோ! தன்னம்பிக்கை தரும் இளைஞர்

  • Share this:
வாழ்க்கையில் வெற்றி பெற கை தேவையில்லை தன்னம்பிக்கை போதும் என்று போராடி வாழ்ந்து வரும் இளைஞரின் ஒருவரின் வீடியோ ஃபேஸ்புக்கில் வைரலாகி வருகிறது.

உடலில் ஒரு குறையும் இல்லாதவர்கள் கூட உழைத்திட சோம்பேறித்தனமாக இருப்பவர்கள். அவர்கள் மத்தியில் இரண்டு கைகள் இல்லாமல் இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் புகைப்பட கலைஞராக இருக்கும் வீடியோ தான் இது.

பொது நிகழ்ச்சி ஒன்றில் 2 கைகள் இல்லாத ஒருவர் புகைப்படம் எடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார். தனது பேண்டில் வைத்திருக்கும் செல்போனை அசல்டாக எடுத்து பேசி முடித்துவிட்டு அதனை  மீண்டும்  பேண்ட் பாக்கெட்க்குள் வைத்துவிடுகிறார்.



அவருக்கு 2 கைகள் இல்லாமல் இருந்தாலும் அந்த மொபலை எந்தவித சிரமுமின்றி பயன்படுத்துகிறார். விஜய் நடித்த கத்தி படத்தின் “யார் பெற்ற மகனோ, இவர் யார் பெற்ற மகனோ“ பின்னணி இசையில் அந்த வீடியோ உள்ளது. பார்ப்பவர்களை கலங்க வைக்கும் அந்த வீடியோவை 10 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: