"கடவுளுக்கு நன்றி... தரையில் விழும் முன் பிடித்தேன்...” 2 வயது குழந்தையை கேட்ச் பிடித்து காப்பாற்றிய ஹீரோ

news18
Updated: June 28, 2019, 4:07 PM IST
சிசிடிவி காட்சிகள்
news18
Updated: June 28, 2019, 4:07 PM IST
துருக்கியில் ஜன்னல் வழியே மாடியிலிருந்து விழுந்த 2 வயது குழந்தையை, உள்ளூர் இளைஞர் கேட்ச் பிடித்து காப்பாற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் அருகே உள்ள ஃபெய்த் என்ற பகுதியில் தோஹா முகம்மது என்ற 2 வயது குழந்தை இரண்டாவது மாடியிலிருந்து ஜன்னல் வழியாக தவறி விழுந்தது. அப்போது, சாலையில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நல்வாய்ப்பாக உடனே குழந்தையை தனது கையால் கேட்ச் பிடித்து, காப்பாற்றினார்.

இந்த காட்சி அங்குள்ள சிசிடிவி ஒன்றில் பதிவாகி தற்போது வைரலாக பரவி வருகின்றது. குழந்தையை சரியான நேரத்தி பிடித்த இளைஞர் சாபத் அல்கேரியன் நாட்டைச் சேர்ந்தவர். அந்த இளைஞர அங்குள்ள ஒர்க்சாப்பில் பணிபுரிந்து வருகிறார்.


தனது குழந்தையை காப்பாற்றிய அந்த இளைஞனுக்கு 200 டர்கீஸ் லிராஸை (துருக்கி ரூபாய்) வெகுமதியாக தந்தை கொடுத்துள்ளார். “கடவுளுக்கு நன்றி... குழந்தை தரையில் விழும்முன் பிடித்தேன்” என்று சாபத் கூறியுள்ளார்.

First published: June 28, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...