மனிதர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை நேசிக்கிறார்கள், கவனித்துக்கொள்கிறார்கள் என்று அனைவரும் ஒரு நினைப்பு இருக்கலாம். ஆனால் அது அவ்வாறு இல்லை, விலங்குகளும் தங்கள் குழந்தைகளை மனிதர்களை போல் மிகவும் நேசிக்கின்றன மற்றும் பாதுகாக்கின்றன என்பதை உலகிற்கு உணர்த்தும் வகையில் தற்போது சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அந்த விடியோவில் கொரில்லா ஒன்று தனது குழந்தையை கவனித்து கொள்ளும் முறை அப்படியே மனிதர்களை போலவே மிகவும் இயல்பாக அன்பாக உள்ளது. அந்த பாசத்தை பார்க்கும்போது இது மனிதர்களிடமிருந்து வேறுபட்டதல்ல என்பதை நீங்கள் உணருவீர்கள்.
இன்ஸ்டாகிராமில் ViralHog என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த விடியோ இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது, மேலும் அனைவராலும் விரும்பப்படும் இந்த விடியோவானது இதுவரை 21 ஆயிரம் லைக்களையும் கடந்துள்ளது. இந்த வீடியோவில் மிருகக்காட்சி சாலைக்கு வரும் மக்களுக்கு தனது குழந்தையை அன்போடு அறிமுகப்படுத்துகிறது இந்த கொரில்லா.
இந்த கொரில்லாவின் அறிமுகத்தை பார்த்தாலே 'பாகுபலி' படத்தின் அந்த காட்சிதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அதில் 'அமரேந்திர பாகுபலி' இறந்த பிறகு 'ராஜ்மாதா சிவகாமி தேவி' 'மகேந்திர பாகுபலி'யை கையில் தூக்கி மக்களுக்கு அறிமுகப்படுத்துவார் அல்லவா அதே போல் தான் இந்த கொரில்லாவும் மக்களுக்கு தனது குழந்தையை கையில் தூக்கி காட்டுகிறது.
தனது குழந்தையின் நெற்றியில் அன்போடு முத்தமிடும் கொரில்லா:
இந்த வீடியோவானது கனடாவில் உள்ள கல்கரி மிருகக்காட்சிசாலையில் எடுக்கப்பட்டது ஆகும். இதில் ஒரு பெண் கொரில்லா கண்ணாடி கூண்டுக்குள் அமர்ந்து தனது குழந்தையை மடியில் வைத்து கொஞ்சுகிறது. இதை பார்க்க கூண்டின் அருகில் மக்கள் வந்து நின்றவுடன், கொரில்லா தனது குழந்தையின் இரு கைகளையும் பிடித்து காற்றில் தூக்கி மக்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்குகிறது. பிறகு குழந்தை கொரில்லாவை தன் மடியில் வைத்துக்கொண்டு அதற்கு அன்பாக நெற்றியில் முத்தமிடுகிறது தாய் கொரில்லா.
Also Read : ஹோட்டலில் படுக்கையில் இருப்பவர்களை எழுப்பி விடும் யானை - வைரல் வீடியோ
இந்த உணர்ச்சிப்பூர்வமான விடியோவை பார்த்த பலரும் தங்களது தனிப்பட்ட கருத்துக்களைக் சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பார்வையாளர் மிருகக்காட்சி சாலையில் விலங்குகளை வைத்திருப்பதற்கு பதிலாக, அவற்றை சுதந்திரமாக விட வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் ஒருவர் கூண்டுகளில் விலங்குகளைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது, அவை சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பகிர்ந்துள்ளார். கொரில்லாவைப் பார்த்ததும் மருத்துவமனையில் இருக்கும் செவிலியரின் நினைவு வருகிறது என்றார் ஒருவர். அதே சமயம் இது மிருகக்காட்சி சாலை அல்ல சிறை என்று கூறினார். விலங்குகள் ஏன் தங்கள் குழந்தைகளை இவ்வளவு வன்முறையாக நடத்துகின்றன என்று கேலியாக ஒரு பெண் கேட்டுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.