ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அலுவலகத்தில் ஆவணங்களை எடுத்து கொண்டு ஓடிய ஆடு ... துரத்திய ஊழியர் - வைரலாகும் வீடியோ

அலுவலகத்தில் ஆவணங்களை எடுத்து கொண்டு ஓடிய ஆடு ... துரத்திய ஊழியர் - வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : ஆடு ஒன்று அலுவலக கோப்புகளை எடுத்துக் கொண்டு ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஆவணங்களை வாயில் எடுத்து கொண்டு ஆடு ஒன்று வேகமாக ஓடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஓடும் ஆட்டிற்கு பின்னரே ஊழியர் ஆட்டைத் துரத்துவதைக் காணலாம். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அலுவலகத்திற்குள் நுழைந்த ஆடு ஒன்று ஊழியரின் ஆவணங்களை எடுத்துச் சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி நூற்றுக்கணக்கான பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ராஜீவ் நிகம் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஆடு ஒன்று அலுவலக ஆவணத்தை எடுத்து கொண்டு ஓடும் போது ஆட்டின் பின்னரே அலுவலக ஊழியர் ஓடிச் சென்று "அரே யார் தேடே" என்று எரிச்சலுடன் அழைக்கிறார். ஆனால், ஆடு ஒரு நொடி கூட நிற்கவில்லை.

காணொளியின் கடைசிப் பகுதியில், வெகுதொலைவில் ஆட்டின் பின்னால் பணியாளர் ஓடுவதைக் காணலாம். பின்னர் இறுதியாக ஆவணங்களை அவர் திரும்பப் பெற்றார். ஆனால் ஆடு அவற்றில் ஒரு பகுதியை ஏற்கனவே மென்று தின்று விட்டது.

ட்விட்டர் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை 4,760 பேர் லைக் செய்துள்ளனர். 61 பேர் ரீட்வீட் செய்துள்ளனர்.

First published:

Tags: Viral Video