Home /News /trend /

ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

மனிதரைப் போல அந்த ஆடு தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்து, சந்தைக்கு வந்தவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களும் கண்கலங்கினர்.

    சமூக வலைதளங்களில் உலகெங்கிலும் தினசரி கோடிக்கணக்கான வீடியோக்கள் வெளியானாலும் அதில் சில வீடியோக்கள் மட்டுமே நம்மை நெகிழ வைக்கும். குறிப்பாக அத்தகைய வீடியோக்கள் பெரும்பாலும் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் அல்லது விலங்குகளுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசத்தையும் அன்பையும் பிரதிபலிப்பதாக இருக்கும். அப்படி ஒரு ஆட்டின் உணர்வுபூர்வமான வீடியோ ஒன்றுதான் இன்று இணையதளங்களை ஆக்கிரமித்து சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது

    பக்ரீத் பண்டிகை என்ற உடனே நம் நினைவுக்கு வருவது பிரியாணிதான். பக்ரீத் பண்டிகை அன்று ஆடுகள் பலி கொடுப்பது முக்கிய சடங்காக கருதப்படும். அதனால்தான், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை களை கட்டும். அந்த வகையில், இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகைக்கும் ஏராளமான ஆடுகள் விற்பனை ஆனது.

    குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலம் கவுசர்பாக் என்ற சந்தையில் ஒரு ஆடு 8 லட்ச ரூபாய்க்கு விற்பனையானது. காரணம், இது நாட்டிலேயே முன்னணி கால்நடை விற்பனை சந்தைகளில் ஒன்று. இங்கு மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஆடுகள், மற்றும் மாடுகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படும்.

    மத்தியப் பிரதேசத்தில் உள்ள கோட்டா என்ற இடத்தில் இருந்து வந்த ஆடு ஒன்று 8 லட்ச ரூபாய்-க்கு விற்பனை ஆன சம்பவம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 170 கிலோ எடை கொண்ட இந்த ஆட்டை வெறும் எடைக்காக மட்டுமே இவ்வளவு விலை கொடுத்து வாங்கவில்லை. அப்படி இந்த ஆட்டின் ஸ்பெஷல் என்ன தெரியுமா? இதன் காதுகள் 16 முதல் 17 இன்ச்-கள் வரை நீளமானவை. இந்த ஆட்டை பார்த்துக் கொள்வதற்காகவே, 2 பேரை வேலைக்கு வைத்துள்ளார் ஆட்டின் உரிமையாளர் ஆசிப்.

    Also read : பயணம் செய்வதில் மோகம்... மளிகை கடை வருமானத்தில் வெளிநாடுகளுக்கு விசிட்.. உலகை சுற்றும் ”மோலி சேச்சி”!

    இப்படி பக்ரீத் பண்டிகையையொட்டி நடந்த ஆடு விற்பனை தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின. ஆனால், கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட ஆட்டின் வீடியோ எந்த ஊரில் எடுக்கப்பட்டது என தெரியவில்லை. ஆனால் அந்த வீடியோ கடந்த 2 நாட்களாகவே இணையத்தைக் கலக்கி வருகிறது.



    குர்பானிக்காக இந்த ஆட்டை விற்பதற்காக, அதன் உரிமையாளர் ஆட்டை சந்தைக்கு இழுத்து வந்துள்ளார். அப்போது ஒரு நபர் அந்த ஆட்டை விலை பேசினார். பிறகு உரிமையாளரிடம் பணத்தை கொடுத்துவிட்டு, ஆட்டை இழுத்துக் கொண்டு போக முயன்றார்.. அப்போது சற்றும் எதிர்பாராத வகையில், திடீரென அந்த ஆடு, உரிமையாளரை கட்டிப்பிடித்துக் கொண்டு கதறி அழ ஆரம்பித்தது. அந்த ஆட்டை சமாதானப்படுத்த அதன் உரிமையாளரால் கூட முடியவில்லை.

    அவர் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் ஆடு அழுகையை நிறுத்தவே இல்லை. கிட்டத்தட்ட மனிதரைப் போல அந்த ஆடு தேம்பித் தேம்பி அழுததைப் பார்த்து, சந்தைக்கு வந்தவர்களும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களும் கண்கலங்கினர். ஒரு கட்டத்தில் அதன் உரிமையாளரும் சோகம் தாங்க முடியாமல் கண் கலங்கினார்.

    இதனை பார்த்ததும் அந்த ஆட்டை வாங்கிய நபர், பணத்தை அந்த ஆட்டின் உரிமையாளரிடமே கொடுத்துவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து கிளம்பினார். அதற்கு பின்னர்தான் ஆடு அழுகையை நிறுத்தியது. நெஞ்சைக் கலங்க வைக்கும் இந்த பாசப்போராட்டத்தின் வீடியோ காட்சிகள் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி