Home /News /trend /

பெண்ணை கட்டிப்பிடித்து அன்பை பொழிந்த முதலை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

பெண்ணை கட்டிப்பிடித்து அன்பை பொழிந்த முதலை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral video : முதலையோடு பாசமழை பொலிந்து அன்பை வெளிப்படுத்தும் பெண்ணின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    முதலை ஒன்று நம்மை நோக்கி நகர்ந்து துரத்தி வந்தால் பயத்தில் உயிரை காப்பாற்ற ஓடி எங்காவது சென்று மறைந்து கொள்வர். ஆனால் இங்கு கதையே வேறு. கலிபோர்னியாவில் உள்ள ஊர்வன உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளர் ஒரு பெரிய முதலையை இறுக்கமாக கட்டிப்பிடிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    இது தொடர்பாக thereptilezoo என பெயர் கொண்டுள்ள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள வீடியோவில், ஒரு பெரிய முதலை ஒன்று அதன் உரிமையாளரை கண்டதும் அவரின் மீது படுத்துக் கொண்டு அன்பை பொழிகின்றது. பின்னர் பெண்ணின் மீது சிறுநீர் கழித்து விட்டது. இது குறித்து பராமரிப்பவர் கூறும் போது முதலை எனது நீண்ட கால தோழி , சில நேரங்களில் நான் கட்டிப்பிடிப்பேன் என கூறியுள்ளார்.

    சமூக வலைதளங்களில் பரவி வரும் இந்த வீடியோ 1.25 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது. அலிகேட்டர் தனது பராமரிப்பாளருடன் பகிர்ந்து கொள்ளும் பிணைப்பை நெட்டிசன்கள் பலரும் விரும்பியுள்ளனர். பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

     



     




    View this post on Instagram





     

    A post shared by The Reptile Zoo (@thereptilezoo)






    இது குறித்து இணையவாசிகள் கமெண்ட்ஸ்சில் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். ஒருவர் "அணைப்புகள் நட்பை பலப்படுத்துகின்றன." மற்றொருவர், "அவர் உன்னை நேசிக்கிறார் என்று நினைக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி