Viral Video : தேவாலயத்தில் புகுந்த முதலை - சர்ச்சையில் சிக்கிய பாதிரியார்!

தேவாலயத்தில் புகுந்த முதலை

தன்னுடைய செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியதால், பாதிரியார் டேனியல் வருத்தம் தெரிவித்துள்ளார். மக்கள் இதுபோன்று செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Share this:
அமெரிக்காவில் தேவாலயத்துக்குள் புகுந்த முதலையை, பிரேயருக்கு அழைத்து வீடியோ பதிவிட்ட பாதிரியார் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அமெரிக்காவில் புளோரிடா மாகாணத்தில் இருக்கும் தேவாலயம் ஒன்றில் ஜூன் 29 ஆம் தேதி முதலை ஒன்று புகுந்துள்ளது. வழிதவறி வந்த அந்த முதலை தேவாலயத்துக்குள் சென்றதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால், தேவாலயத்தின் பாதிரியார் முதலையைக் கண்டு சிறிதும் அஞ்சாமல், தேவாலயத்துக்கு வருகை தந்ததுக்கு நன்றி தெரிவித்துள்ளார். பின்னர், அதனை தேவாலயத்தின் பிரேயர் பகுதிக்கு அழைத்த அவர், தன்னுடைய பிஸினஸ் கார்ட் ஒன்றையும் அதற்கு கொடுத்தார். இவையனையத்தையும் வீடியோ பதிவு செய்து தன்னுடைய முகநூல் பக்கத்திலும் வெளியிட்டார். இது தற்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

ALSO READ |  'வனிதாவுக்கு கர்மாவா? அவசரப்பட்டுட்டேன்;நடிகை ரேவதியின் மறுபக்கம் - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

புளோரிடாவின் லே ஹைக் ஏக்கர்ஸ் பகுதியில் விக்டர் தேவாலயம் இருக்கிறது. அங்கு பாதிரியாராக டேனியல் கிரிகோரி உள்ளார். ஜூன் 29 ஆம் தேதி வழக்கம்போல் தேவாலயத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது, அங்கு அலிகேட்டர் முதலை ஒன்று வந்துள்ளது.



தேவாலயத்தில் பல்வேறு பகுதிகளில் உலாவிய முதலையைப் பார்த்த டேனியல் கிரிகோரி அதன் அருகில் சென்று செல்பி எடுத்துக்கொண்டுள்ளார். மேலும், தங்கள் சர்ச்சுக்கு வந்த முதலை, தேவாலயத்துக்குள் வந்து பிரார்த்தனை செய்ய விரும்பவில்லை எனவும் கூறினார்.

 



அவர் பதிவிட்ட இந்த வீடியோக்கள் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. பலரும் பாதியார் டேனியல் கிரிகோரிக்கு கண்டனம் தெரிவித்தனர். பின்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு நடந்த நிகழ்வைப் பற்றி விளக்கம் அளித்த டேனியல் கிரிகோரி, தான் செய்தது போன்று மற்றவர்கள் யாரும் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

ALSO READ |  என்னென்ன செய்றான் பாருங்க.... நடனம் ஆடி ரசிகர்களை சேர்க்கும் நாய்... - வைரல் வீடியோ

அமெரிக்காவின் வனத்துறை அதிகாரிகளும் பாதிரியார் டேனியலுக்கு கண்டனம் தெரிவித்தனர். வன விலங்குகள், அதுவும் நொடிப்பொழுதில் தாக்கக்கூடிய விலங்குகளிடம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும் எனக் கூறியுள்ள வனத்துறை அதிகாரிகள், பாதிரியார் டேனியல் செய்ததுபோல் அருகாமையில் சென்று புகைப்படம் எடுத்தல், வீடியோ பதிவு செய்தல் ஆகியவற்றை செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.



தன்னுடைய செயல்பாடு சர்ச்சையை ஏற்படுத்தியதால், பாதிரியார் டேனியல் வருத்தம் தெரிவித்துள்ளார். மக்கள் இதுபோன்று செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் முதலையை மீட்டுச் சென்றனர். இதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடகாவிலும் முதலை ஒன்று கிராமத்துக்குள் நுழைந்தது.

ALSO READ |  நயன்தாராவிற்கு திருமண ஏற்பாடு? முதலமைச்சருக்கு குவியும் புத்தகங்கள்! - இன்றைய கூகுள் ட்ரெண்டிங்

ஆற்றுப் பகுதியையொட்டி அமைந்திருக்கும் அந்த கிராமத்துக்குள் புகுந்த முதலை, வீதிகளில் இயல்பாக உலாவந்தது. மக்களும் ஆர்வமாக பார்த்தனர். பின்னர், அந்த முதலையை பிடித்த வனத்துறையினர் ஆற்றின் ஆழமான பகுதிக்கு கொண்டுசென்று விட்டனர்.



முதலையின் இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. மேலும், அந்த கிராம மக்கள் கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published: