• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • பாதையில் சென்ற மலைப்பாம்பை வேட்டையாடிய சிறுத்தை(வீடியோ)

பாதையில் சென்ற மலைப்பாம்பை வேட்டையாடிய சிறுத்தை(வீடியோ)

மலைப்பாம்பை வேட்டையாடிய சிறுத்தை

மலைப்பாம்பை வேட்டையாடிய சிறுத்தை

வழியில் சென்ற பாம்பை வலுக்கட்டாயமாக வேட்டையாடிய சிறுத்தையின் செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    மலைப்பாம்புகள் தனது இரையை நெரித்துக் கொன்று அதன் பிறகு அவற்றை உண்ணும் பழக்கம் உடையவை. இதனிடம் மாட்டினால் அப்படியே தனது உடலால் சுருட்டிக்கொண்டு உடலை நெரித்து கொன்று தின்று விடும்.  ஆப்பிரிக்கக் கண்டத்தில் வெப்ப மண்டலங்களில் சகாரா பாலைவனத்திற்கு தென் பகுதியில் இவை அதிகமாக காணப்படுகின்றது.

    இந்நிலையில் மலைப்பாம்பு ஒன்று சிறுத்தையிடம் மாட்டிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சிறுத்தை தான் வேட்டையாடும் எந்தவொரு மிருகத்தையும் உணவாகக் கொள்ளும். அவ்விதம் சிறுத்தை ஒன்று காட்டில் சென்று கொண்டிருக்க வழியில் மலைப்பாம்பு குறுக்கே சென்றுள்ளது.

     



     

    அதனை கண்ட சிறுத்தை சிறிது நேரம் நின்று பார்த்து விட்டு பாம்பின் முகத்திற்கு முன் நின்று சண்டை செய்து அதன் தலைப்பகுதியை வாயில் கவ்விக்கொண்டு வரும் காட்சி வைரலாகி வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: