ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

எங்க காணோம்...! டிவியில் கோல்ப் ஷாட்டை பார்த்து பந்தை தேடி அழைந்த நாய் - வைரல் வீடியோ

எங்க காணோம்...! டிவியில் கோல்ப் ஷாட்டை பார்த்து பந்தை தேடி அழைந்த நாய் - வைரல் வீடியோ

Trending Video

Trending Video

Viral Video | .கோல்ஃப் விளையாட்டை டிவியில் சுவாரஷ்யமாக பார்க்கும் வளர்ப்பு நாயானது கோல்ஃப் பிளேயர் அடித்த பந்தை எங்கு சென்றது என்று வீட்டிற்குள், ஜன்னல் வழியாகவு் தேடி அழைகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

இப்போதெல்லாம் செல்ல பிராணிகள் அனைத்தும் குழந்தைகளுக்கு சமமாகத்தான் வீட்டில் வளர்க்கப்படும் நிலை உள்ளது. மனிதர்களுடன் வாழ்வதால், வளர்ப்பு பிராணிகளும் மனிதர்களைப் போலவே கேஜெட்கள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் விரும்பிகளாக மாறி வருகின்றன. வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து டிவி பார்க்க ஆரம்பித்த பிறகு அதற்கு செல்ல பிராணிகளும் அடிமையாகிவிட்டனர் என்றே கூறலாம். சமீபகாலமாக நாய்கள் மற்றும் பூனைகள் செய்யும் கலாட்டா வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்க வாய்ப்பிருக்கிறது. டிவி பார்ப்பதாகட்டும் அல்லது ஃபோன்களில் வீடியோ பார்ப்பதாகட்டும் இப்படி செல்ல பிராணிகளின் வேடிக்கை வீடியோக்கள் இணையத்தில் எராளமாக கொட்டிக்கிடக்கின்றன.

அப்படி ஒரு சுவாரஷ்ய வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஆம் ட்விட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ள வீடியோவில் கோல்ஃப் விளையாட்டை டிவியில் சுவாரஷ்யமாக பார்க்கும் வளர்ப்பு நாயானது கோல்ஃப் பிளேயர் அடித்த பந்தை எங்கு சென்றது என்று வீட்டிற்குள், ஜன்னல் வழியாகவு் தேடி அழைகிறது.

இந்த வீடியோவில் வளர்ப்பு நாய் ஒன்று வீட்டு ஹாலில் உள்ள டிவியில் மிகவும் நெருக்கமாக மைதானத்தில் நடைப்பெறும் கோல்ஃப் விளையாட்டை நேரில் பார்ப்பதுபோல் பார்த்துக்கொண்டிருக்கிறது. கோல்ஃப் பிளேயர் விளையாடுவதை மிகவும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த கோல்ஃப் பிளேயர் அடித்த ஒரு அற்புதமான ஷாட்டிற்கு பந்தானது மைதானத்தில் கண்ணுக்கு தெரியாத தூரம் சென்று விழுகிறது.

ஆனால் பந்தை டிவியில் பார்க்க முடியாத நாயானது நிஜத்தில் அந்த பாலை தேடுகிறது. அதாவது, கோல்ஃப் பிளேயர் அடித்த பந்து தனது வீட்டில் தான் விழுந்ததாக நினைத்து வீட்டில் உள்ள ஹால் மற்றும் வீட்டு கண்ணாடி வழியாக தோட்டத்திலும் தேடுகிறது. டிவியில் கோல்ப் வீரர் அடித்த பந்தைக் வீட்டிற்குள் தேடிய அந்த வளர்ப்பு நாயின் இந்த வீடியோதான் தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த விடியோவை ட்விட்டரில் @buitengebieden என்பவர் 'Where did the ball go? 😅' என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இதுவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். மேலும்,50 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்குகளையும், 7 ஆயிரத்திற்கும் மேலான ரீட்வீட்களையும் பெற்றுள்ளது.

Also Read : வெள்ளையாக பிறக்கும் குழந்தைக்கு மரண தண்டனை.. ஜாரவா பழங்குடியினரின் விசித்திர பழக்கவழக்கங்கள்

இதேபோல் டிவியில் பார்க்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் உண்மை என கருதி பல செல்லப்பிராணிகள் ரியாக்ட் செய்திருக்கும் வீடியோக்களை தற்போதெல்லாம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடிகிறது. மேலும் இது மாதிரியான வீடியோக்கள் தான் சமீபகாலமாக இணையத்தில் ட்ரெண்டாகியும் வருகிறது என்றே கூறலாம்.

First published:

Tags: Dog, Trending, Viral Video