• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • இறந்தது போல் நடித்து பூனையிடமிருந்து தப்பிப் பறந்த வாத்து... வைரலாகும் வீடியோ

இறந்தது போல் நடித்து பூனையிடமிருந்து தப்பிப் பறந்த வாத்து... வைரலாகும் வீடியோ

மூச்சை அடக்கிக் கொண்டு வாத்து அசைவற்று கிடந்தது. பின்னர், பிடி லேசானதையும், பூனையின் கவனம் சிதறியதையும் உணர்ந்த வாத்து, சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது.

  • Share this:
    பூனையிடம் சிக்கிய வாத்து ஒன்று, உயிரிழந்ததைப் போன்று நடித்து பூனையின் பிடியில் இருந்து தப்பி பறந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் அதிகமானோரால் பகிரப்பட்டு வருகிறது.

    வாத்து இறந்து விட்டதாக நினைத்த பூனை, அதனை வாயால் கவ்வி இழுத்து வருகிறது. ஒரு கட்டத்தில் வாத்தை பூனை பிடித்து அழுத்துகிறது. இருப்பினும் மூச்சை அடக்கிக் கொண்டு வாத்து அசைவற்று கிடந்தது. பின்னர், பிடி லேசானதையும், பூனையின் கவனம் சிதறியதையும் உணர்ந்த வாத்து, சுதாரித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தது. சிறிது தூரம் கடந்ததும் இறக்கை விரித்து பறந்து தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது.

    வீடியோவை பார்க்க



    எதிரிகள் எவ்வளவு பலம் உள்ளவராக இருந்தாலும் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் அவர்களை வீழ்த்தி விட முடியும். அல்லது அவர்களின் பிடியில் இருந்து தப்பிச் சென்று விடலாம். இதற்கு மேலும் ஒரு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்துள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Musthak
    First published: