முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கால்பந்து விளையாட்டில் அசத்தும் நாய் - வைரலாகும் வீடியோ

கால்பந்து விளையாட்டில் அசத்தும் நாய் - வைரலாகும் வீடியோ

கால்பந்து விளையாட்டில் அசத்தும் நாய்

கால்பந்து விளையாட்டில் அசத்தும் நாய்

Viral Video : கோல் போஸ்டில் எதிர் அணியினரை கோல் போடவிடாமல் தடுக்கும் நாய் மற்றும் மனிதர்களிடம் அன்பை எதிர்பார்க்கும் கங்காருவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

நாய் ஒன்று கால்பந்து மைதானத்தில் விளையாடும் போது கோல் போஸ்டில் நின்று கொண்டு தனக்கு எதிரே வரும் அனைத்து பந்துகளையும் கோல் போட விடாமல் தடுத்து நிறுத்திய செயல் இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாய்கள், பாம்புகள் , யானைகள் வீடியோக்கள் இணையத்தில் அதிகம் வைரலாகும். அவ்விதம் தற்போது நாய் ஒன்று இணையவாசிகள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகின்றது. இந்த வீடியோவை இதுவரை 5 லட்சம் மக்கள் பார்வையிட்டுள்ளனர். 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவிற்கு லைக் செய்துள்ளனர். 3,812 பேர் இந்த வீடியோவை ரீட்வீட் செய்துள்ளனர்.

இதே போன்று இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் கங்காரு ஒன்று அன்பிற்காக ஏங்கி மனிதர் ஒருவர் தனது கையை நீட்டியவுடன் கட்டியணைத்து அன்பை பொழிகின்றது. இந்த வீடியோ பலரின் மனங்களை வென்று வைரலாகி வருகின்றது.

இந்த வீடியோவை இதுவரை 1,394 பேர் லைக் செய்துள்ளனர்.

First published:

Tags: Dog, Viral Video