முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கருப்பின இளைஞருக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்த நாய்... வாயில் பதாகை கவ்விக்கொண்டு எதிர்ப்பு

கருப்பின இளைஞருக்கு ஆதரவாக போராட்டக்களத்தில் குதித்த நாய்... வாயில் பதாகை கவ்விக்கொண்டு எதிர்ப்பு

ருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் குதித்த நாய்

ருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் குதித்த நாய்

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டக் களத்தில் நாய் ஒன்று தனது வாயில் பதாகையைக் கவ்விக்கொண்டு போராடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • Last Updated :

அமெரிக்காவின் மினபொலிஸ் நகரில் கருப்பின இளைஞர் ஜார்ஜ் பிளாய்டு, காவல்துறை கைது நடவடிக்கையின் போது கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து பல்வேறு மாகாணங்களில் போராட்டம் வெடித்துள்ளது.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தை கண்டித்து நடைபெற்று வரும் கலவரத்தை ஒடுக்க தேவைப்பட்டால் ராணுவத்தை களமிறக்க உள்ளதாக அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக, ட்விட்டரில் அமெரிக்காவில் நடைபெற்ற போராட்ட புகைப்படங்களையும், ஜார்ஜ் பிளாய்டு கொலை சம்பவத்தை கண்டித்து பதிவுகளையும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ALSO READ நட்புனா என்ன தெரியுமா... மாற்றுத்திறனாளி சிறுவனுக்கு நண்பனான நாய் - வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் கருப்பின இளைஞர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ட்விட்டர் நிறுவனம் அதன் அதிகாரபூர்வ twitter support என்ற ட்விட்டர் பக்கத்தில், கருப்பு வண்ண ப்ரோபைல் படத்தை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் தங்களது பயோவில் BlackLivesMatter என குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒருபுறம் இருக்க இணையத்தில் போராட்ட களத்தில் நாய் ஒன்று தனது வாயில் பதாகையை கவ்விக்கொண்டு போராடிய விதம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ALSO READ: கருப்பின இளைஞருக்கு ஆதரவாக களத்தில் நிற்கும் ட்விட்டர்... ப்ரொபைல் பிக்கை மாற்றி எதிர்ப்பு

இது குறித்து ட்விட்டரில் ஒருவர் நாயின் உரிமையாளருக்கு போராட்ட களத்திற்கு விலங்குகளை அழைத்து செல்ல வேண்டாம். பாதுகாப்பானது அல்ல என பதிவிட்டிருந்தார்.

அதற்கு பதில் அளித்த நாயின் உரிமையாளர், இந்த போராட்டம் அமைதியான முறையில் நடத்தப்பட்டது. இதில் யார் மனதையும் காயப்படுத்தவில்லை. தற்போது தனது நாய் நன்றாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.

ALSO READ: 78-வயதில் பேரன்களுக்கு ஊஞ்சல் ஆட கற்றுக்கொடுக்கும் ஜெயா பாட்டி - இணையத்தில் வைரலாகும் வீடியோ

எனினும் போராட்ட களத்தில் நாய் பங்கேற்ற வீடியோ இணையத்தில் அதிக பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றுள்ளது.


சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube

top videos


    First published:

    Tags: Trending, Video gets viral