உயர்திணையோ, அஃறிணையோ வலி ஒன்று தான். வலி , உணர்வுகள் , பசி , அன்பு காட்டுதல் இவற்றில் மனிதனோடு நாயை ஒப்பிடுதல் குறையாகாது. ஒரு படி நம்மை விட மேலே நின்று யோசிக்க வைத்து விடுகின்றன. உணர்ச்சியில் மனிதனுக்கு எப்படி வலிக்குமோ அதே போன்று நாய்களுக்கும் வலி உணர்வு அதிகம் என்பதை வீடியோ ஒன்று உணர்த்துகின்றது.
இணையத்தில் நாய் ஒன்று தனது குட்டிக்காக நடுரோட்டில் தனது மற்றொரு குட்டியுடன் அழுது கொண்டு இருக்கும் வீடியோ இணையவாசிகளை மனம் கரைய வைத்துள்ளது. இந்த வீடியோவில் தலைப்பில் மனிதனாக இருந்தாலும் சரி, விலங்கு பறவையாக இருந்தாலும் சரி, இறக்கும் வலி அனைவருக்கும் உண்டு என்பதை இந்த மனதை தொடும் வீடியோவில் காணலாம், எனவே வாகனம் ஓட்டும் போது தயவு செய்து பார்த்து ஓட்டுங்கள் என பதிவிட்டுள்ளனர்.
இரு சக்கர வாகனங்கள் , கார் போன்ற வாகனங்களில் செல்லும் போது பூனை , நாய்க்குட்டி போன்ற சாலையில் சுற்றித் திரியும் சிறு பிராணிகள் விபத்தில் சிக்கி உயிர் இழப்பது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. வாகனத்தில் பயணிக்கும் போது சாலை விபத்தில் இறந்துவிடாமல் இருக்க மனிதனின் உயிரை காக்க ஹெல்மெட் அணியுமாறு காவல் துறையினர் வேண்டுகோள் விடுகின்றனர். அதனை போல் மிக முக்கியமான பொறுப்பு நாம் சாலையில் உள்ள மற்ற உயிரினங்களையும் காப்பது. இரு சக்கர வாகனமோ காரோ செல்லும் போது மெதுவாகச் செல்லவும் என இணையவாசிகளை இந்த வீடியோ மனம் கரைய வைத்து விட்டது.
अपनो के मरने की पीड़ा मनुष्य हो या पशु पक्षी सभी को होती है जैसा कि इस मार्मिक वीडियो में आप देख सकते है इसलिए निवेदन यह है की गाड़ी चलाते समय ये ध्यान रखे किसी मां के बच्चे के ऊपर से आपकी गाड़ी ना गुजर जाए. pic.twitter.com/cdsCrqkqXd
இந்த வீடியோவை 302 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். மற்றும் 13 பேர் குவோட் ட்வீட் செய்து உள்ளனர். 1,069 பேர் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
Published by:Sankaravadivoo G
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.