ருத்ர தாண்டவமாடும் தென்னை மரம் - வைரலாகும் வீடியோ
Viral Video |

ருத்ர தாண்டவம் ஆடும் தென்னை மரம் - வைரலாகும் வீடியோ
- News18 India
- Last Updated: August 7, 2020, 3:42 PM IST
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பெய்த பலத்த மழையால் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், கனமழை நீடிக்கும் என்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
சாலையில் ஆறு போல் தண்ணீர் பெருக்கு ஓடியதால், பொதுமக்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பேர்ல், பிரபாத்வி ரயில் நிலையங்களில் தண்டவாளங்கள் தெரியாத அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது.
தாதர், ஹிந்த்மடா, பெண்டி பஜார் உட்பட பல்வேறு நகரங்களில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியதால் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றது.
இதனிடையே மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைக்கப்பட்டுள்ள தென்னை மரம் கனமழை காரணமாக அடிக்கும் காற்றில் சுழன்று சுற்றுகிறது. தென்னை மரம் விழுந்து ஏதேனும் சேதத்தை ஏற்படுத்தி விடுமோ என்னும் நோக்கில் பார்ப்பதற்கே பதற்றத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

This one is crazy....#MumbaiRains pic.twitter.com/SrFbke1rXV
— swarup mohanty (@mohanty_swarup) August 5, 2020