• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • மீன்களுக்கு உணவளிக்கும் மனித குரங்கு ... வைரலாகும் வனத்துறை அதிகாரி பதிவிட்ட வீடியோ

மீன்களுக்கு உணவளிக்கும் மனித குரங்கு ... வைரலாகும் வனத்துறை அதிகாரி பதிவிட்ட வீடியோ

மீன்களுக்கு உணவளிக்கும் மனித குரங்கு

மீன்களுக்கு உணவளிக்கும் மனித குரங்கு

மரப்பலகையில் அமர்ந்திருக்கும் மனித குரங்கு ஒன்று கீழே நீரில் நீந்தி கொண்டிருக்கும் மீன்களுக்கு உணவளித்தவீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

  • Share this:
    சிம்பன்சி ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    மனித குரங்கு ஒன்று மீன்களுக்கு உணவளிக்கும் வீடியோவை வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பூங்கா போன்று இருக்கும் அந்த பகுதியில் மரப்பலகையில் அமர்ந்திருக்கும் மனித குரங்கு ஒன்று கீழே நீரில் நீந்தி கொண்டிருக்கும் மீன்களுக்கு உணவளித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

    அந்த வீடியோவில், அந்த வீடியோவில், மரபாலத்தின் மீது அமர்ந்து இருந்த மனித குரங்கு ஒன்று தனது அருகில் மீன்களுக்கான உணவுகள் வைத்துக் கொண்டு அமர்ந்து உள்ளது. உணவுகளை தனது கைகளில் எடுத்து நீரில் உணவினை போடுகின்றது. உடனே கூட்டம் கூட்டமாக மீன்கள் வந்து இரையை உண்கின்றது. இந்த வீடியோவிற்கு பலரும் கமெண்ட் செய்து உள்ளனர்.



    இதே போன்று சமீபத்தில் சிம்பன்சி ஒன்று மனிதனைப் போல் துணி துவைக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது . அந்த வீடியோவில் சிம்பன்சி ஒன்று நீரோடையில் தனது துணிகளை துவைக்கின்றது. மஞ்சள் நிற டி-ஷர்ட்டை சோப்பு போட்டு துவைத்து நீரோடையில் அலசும் வீடியோ இணையவாசிகளை பெரிதும் கவர்ந்துள்ளது.

     

     



     




    View this post on Instagram





     

    A post shared by Sachin Sharma (@helicopter_yatra_)






     

    இந்த வீடியோ 95,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் வைரலாகி வருகின்றது. பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். சிம்பன்சி எப்படி துணி துவைக்க முடியும் எனவும் அதற்க்கு துவைக்கும் படி கற்றுக்கொடுத்தது யார் எனவும் கமெண்ட்ஸ் பதிவிட்டுள்ளனர்.

    இதே போன்று சுசந்தா நந்தா மற்றும் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அதில் ஆமை ஒன்று சிங்கத்தின் வாயின் அருகில் நின்று தண்ணீர் குடுக்கவிடாமல் தொந்தரவு செய்தது போல் இருந்தது. சிலர் ஆமை சிங்கத்திடம் நட்பு வேண்டுகிறது எனவும் இந்த வீடியோவிற்கு கமெண்ட்ஸ் பதிவிட்டு இருந்தனர்.

     



    ஆமையின் தொந்தரவு தாங்காமல் சிங்கமோ சற்று தள்ளி மற்றொரு இடத்தில் சென்று நீர் அருந்த ஆமை சிங்கத்தை விட்ட பாடில்லை. என்னை உங்க நட்பு வட்டாரத்துல சேத்துக்கோங்க என கூறும் படி இருந்தது ஆமையின் செயல். இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: