புது மணப்பெண்ணின் செயலால் உறவினர்கள் அதிர்ச்சி - வைரல் வீடியோ

மணப்பெண்ணின் செயலால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள்

தற்போது ஒரு திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 • Share this:
  கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்ற பழமொழி, நவீன காலத்தின் வளர்ச்சியால் மறைந்து வருகிறது . காலம் மாறிவிட்டதால் அதற்கேற்ப சடங்குகளையும் மாற்றி வருகின்றனர். திருமணம் என்பது டிரெண்டாகி விட்டதால் பழைய கலாச்சாரங்களும் மாறி வருகிறது.

  தற்போது ஒரு திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் வரும் மணப்பெண்ணின் செயல் தான் அனைவரும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. திருமணமான பெண் ஒருவர் உறவினர்கள் முன் விருந்து சாப்பிடுகிறார்.
  அப்போது அவருக்கு வழங்கிய சூடான உணவை கொண்டு வாயில் சிகெரட் பிடிப்பது போன்று புகைவிடுகிறார். வளையம் வளையமாக அவர் புகைவிட முயற்சி செய்வதை பார்த்த அங்கிருந்த உறவினர்களுக்கு இது அதிர்ச்சியாக அமைந்திருக்கும்.

  மணப்பெண் புகைவிடுவதை தன்னை மறந்து ரசித்து கொண்டிருக்கிறார். சுதாரித்து கொண்ட அருகிலிருந்த மணமகன் அவரை தட்டிவிடுகிறார். இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவிற்கு பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: