ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

திருமணத்தில் நடந்த விபரீதம் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

திருமணத்தில் நடந்த விபரீதம் ... இணையத்தில் வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

Viral Video : திருமண நாள் அன்று விபரீதமாக ஊஞ்சலில் இருந்து மணமக்கள் கீழே விழுந்த செயல் இணையத்தில் வைரலாகி உள்ளது. பலரும் இது போன்று முயற்சிக்கும் முன் கவனமாக இருங்கள் என விழிப்புணர்வோடு இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்தியாவில் இது திருமண சீசன், திருமணத்திற்கு தயாராகும் தம்பதிகள் தங்கள் திருமணத்தை மறக்க முடியாததாக மாற்றும் முயற்சியில் வித்யாசமாக திருமண நாளில் ஏதேனும் செய்ய முயற்சிக்கின்றனர். திருமண மேடைகளில் உறவினர்களை காட்டிலும் மணமகன் மற்றும் மணமகள் முன்னணியில் இருப்பதோடு, தேர்களிலும், சுழலும் மேடைகளிலும், ஊஞ்சல்களிலும் தங்கள் திருமண அரங்குகளில் பிரமாண்டமாக நுழைகிறார்கள். இவ்விதம் மண மேடையை வடிவமைப்பதன் மூலம் மணமகனும், மணமகளும் அந்நாளை மறக்க முடியா நாளாக மாற்றி தங்கள் திருமண நாளை மகிழ்ச்சியானதாக வைத்து கொள்கின்றனர்.

தற்போது திருமண நாளை சற்று விதசமாக செய்ய முயற்சித்து இறுதியில் விபரீதத்தில் முடிந்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அந்த வீடியோவில், மணமகனும், மணமகளும் தங்கள் திருமண நாளில் ஓவல் ஸ்விங் போன்று வடிவமைத்து அதில் ஏறி நிற்பது போல் அமைத்துள்ளனர். ஜோடியை வரவேற்க பின்னணி நடனக் கலைஞர்கள் நடனம் ஆடும்போது மேடையில் பட்டாசு வெடித்து எரிகிறது. எனினும் திடீரென்று, மணமக்கள் நின்று கொண்டிருந்த ஊஞ்சல் சரிந்து விழுந்தது. அதில் இருந்த இருவரும் கீழே விழுந்து நல்வாய்ப்பாக யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. சுமார் 12 அடி உயரத்தில் இருந்து இருவரும் மேடையில் விழுந்தனர்.

தம்பதிகள் கீழே விழுந்ததால், விருந்தினர்கள், தம்பதியினரின் உறவினர்கள் உள்ளிட்டோர் அலறியடித்துக்கொண்டு மேடையை நோக்கி ஓடத் தொடங்கினர். மணமகனும், மணமகளும் லேசான காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் பொறுப்பேற்று தம்பதிக்கு அனைத்து உதவிகளையும் செய்தது. விபத்திற்கு பிறகு தம்பதிகள் தங்கள் திருமண சடங்குக்கு சென்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

First published:

Tags: Marriage, Viral Video