கொரோனா தொற்று காரணமாக ஆன்லைன் வகுப்பபுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் அனைத்தும் பள்ளி வகுப்பு மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வரும் பள்ளியில் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்கள் வீடியோ வெளியாகி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
ஒரு புறம் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருக்க மற்றொரு புறம் மாணவர்கள் வகுப்பறையில் நடனமாடி கூத்தடிக்கும் வீடியோ வெளியானது. அதேப் போன்று வகுப்பறையில் தூங்கி கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் தட்டி கேட்டதால் அவரையே மாணவன் தாக்க முயன்ற வீடியோ அரசு பள்ளி ஆசிரியர்களின் அவலத்தை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்தது.
தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 11-ம் வகுப்பு மாணவர்களை ரேக்கிங் செய்து அவர்களை தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் உள்ள மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Also Read : நான் பாஸா..? தேர்ச்சி பெற்றது தெரியாமல் மீண்டும் ஓரண்டாக 10-ம் வகுப்பு படித்த அரசு பள்ளி மாணவன்
இந்நிலையில் இவை அனைத்திற்கும் உச்சக்கட்டமாக பள்ளி வகுப்பறையில் மாணவிகள் மடி மீது தலை வைத்து மாணவர்கள் செல்போன் பயன்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோ மதிய உணவு இடைவேளையின் போது எடுக்கப்பட்டது என்பது தெரிகிறது. மேலும் வகுப்பறையில் பல மாணவர்கள் செல்போனில் கேம் விளையாட சில மாணவர்கள் மாணவிகளின் மடி மீது தலைவைத்து கொண்டே செல்போன் பயன்படுத்துகிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.