ஊடகங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 2,500 வருடங்கள் பழைமையான மம்மி...இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஊடகங்களுக்கு முன்பு திறக்கப்பட்ட 2,500 வருடங்கள் பழைமையான மம்மி...இணையத்தில் வைரலாகும் வீடியோ

2500 வருடங்கள் பழைமையான மம்மி

ஊடகங்கள் முன்னர் மம்மிகள் இருந்த சவப்பெட்டி திறக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.

 • Share this:
  கடந்த சனிக்கிழமை எகிப்தில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்கள் சுமார் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்ட 59 சவப்பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். அதனுள் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மம்மிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

  யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக கருதப்படும் எகிப்த்தின் தலைநகர் என அறியப்படும் கெய்ரோவில் தெற்கே உள்ள சக்காரா எனுமிடத்தில் இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

   

      

  கண்டுபிடிக்கப்பட்ட மம்மிகளில் ஒன்றை ஊடகங்கள் முன்னிலையில் ஆராய்ச்சி குழு திறந்துள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள சுற்றுலா மற்றும் பழங்கால அமைச்சர் கலீத் அல்-அனானி, இந்த மம்மிகள் கிமு 6ம் அல்லது 7ம் நூற்றாண்டிலிருந்து வந்தவை எனவும் மேலும் சவப்பெட்டிகள், மம்மிக்கள் கிடைக்கப்பெற்ற இடத்தில் இருக்கலாம் என கூறியுள்ளார்.

   

      

      

  இதனிடையே ஊடகங்கள் முன்னர் மம்மிகள் இருந்த சவப்பெட்டி திறக்க பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுவரை 13 மில்லியன் பார்வையாளர்களை பெற்று அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகின்றது.
  Published by:Sankaravadivoo G
  First published: