Home /News /trend /

என்னா அடி! சராமாரியாக செருப்பால் அடித்துக் கொண்ட நபர்கள்.. அதிர்ச்சி வீடியோ!

என்னா அடி! சராமாரியாக செருப்பால் அடித்துக் கொண்ட நபர்கள்.. அதிர்ச்சி வீடியோ!

அதிர்ச்சி வீடியோவின் காட்சி..

அதிர்ச்சி வீடியோவின் காட்சி..

Viral Video | டிவிட்டரில் தற்போது இதுபோன்ற மோதல் காட்சி ஒன்று வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இது எங்கு, எப்போது, எதனால் நடைபெற்றது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பொது இடங்களில் முன், பின் தெரியாதவர்களுடன் ஏதோ ஒரு காரணத்தால் வாக்கு வாதம் ஏற்பட்டு, பின்னர் அது பெரும் மோதலாக மாறுவது இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள அனைத்தும் மனிதர்களுக்கும் பொதுவான விஷயம் தான்.

வீட்டை விட்டு கிளம்பும்போதே இன்று யாரையாவது வம்புக்கு இழுத்து நாலு சாத்து, சாத்திவிட்டு வரும் என்ற நினைப்புடன் யாரும் கிளம்பிச் செல்வதில்லை. எல்லோருமே வெளித்தோற்றத்தில் அமைதியான குணம் படைத்தவர்கள் தான். நாம்  எதிர்கொள்ளும் சூழ்நிலை, எதிராளி பயன்படுத்தும் வார்த்தைகள் ஆகியவை தான், நமக்குள் ஒரு அவமான உணர்வை ஏற்படுத்தி, பெரும் கோபமாக வெளிப்படுகிறது.

அல்லது நாம் அமைதியாகவே இருந்தாலும் கூட, வேறு நபர்கள் விடாப்படியாக வம்பு இழுத்து வன்முறை வழிவகை செய்து விடுவார்கள். இதுபோன்ற தனிமனித மோதல்கள் தன்னியல்பாக தினந்தோறும், ஒவ்வொரு நிமிடமும் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

Read More : க்ரிஷ் படத்தின் நாயகன் ரித்திக் ரோஷன் ஸ்டைலில் மரம் ஏறும் மனிதர் : வைரலாகும் வீடியோ!


சண்டை நடைபெறக் கூடிய பகுதியை சுற்றியுள்ள மக்களிடம் விவாதப் பொருளாக மாறும் இத்தகைய சம்பவங்கள், அதற்குப் பிறகு முடிந்து போனவையாக ஆகிவிடுகிறது.

எல்லோருக்கும் தெரியச் செய்யும் சமூக வலைதளங்கள்

நாமும், நம்மை சுற்றியுள்ள அனைவரும் ஸ்மார்ட்ஃபோன்களுடன் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், இப்போதெல்லாம் இதுபோன்ற தனிமனித மோதல்களை உடனுக்குடன் படம்பிடித்து சமூக வலைதளங்களில் அப்லோடு செய்து விடுகிறார்கள். தொடர்புடைய நிகழ்வும் பல லட்சக்கணக்கான மக்களின் கவனத்திற்கு சென்று சேருகிறது.

தற்போது வைரல் ஆகும் மோதல் காட்சி

டிவிட்டரில் தற்போது இதுபோன்ற மோதல் காட்சி ஒன்று வைரல் ஆகிக் கொண்டிருக்கிறது. இது எங்கு, எப்போது, எதனால் நடைபெற்றது என்ற விவரம் எதுவும் தெரியவில்லை.

ஆனால், வீடியோ காட்சிகளைப் பார்க்கும்போது, நடுத்தர வயதுடைய நபர் ஒருவர், தன்னுடைய ஷூவை கழற்றி முதியவரின் கன்னத்தில் அறைகிறார். இதற்கு சற்றும் தாமதிக்காமல் அந்த முதியவரும் தன்னுடைய காலணியை கழற்றி இந்த நபரின் கன்னத்தில் அறைகிறார்.



இவரும் ஒருவரை மாற்றி ஒருவர் சரமாரியாக காலணியால் அறைந்து கொள்கின்றனர். இதற்கிடையே, இந்த சம்பவத்தைப் பார்த்த அந்தப் பகுதியில் இருந்த நல்ல உள்ளம் கொண்ட ஒரு பெரியவர், உடனடியாக விரைந்து வந்து சண்டையை விலக்கி விடுகிறார்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Tamil Nadu, Trending, Viral Video

அடுத்த செய்தி