மது பாட்டிலில் அமர்ந்தப்படி யோகாசனம்... இளம்பெண்ணுக்கு அடுத்து நடந்த விபரீதம்

வீடியோ காட்சிகள்

முறையான பயிற்சியும், உரிய பாதுகாப்படன் யோகாசனம் மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியும்.

 • Share this:
  யோகா நம் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று சுகாதார நிபுணர்களும் மத்திய அரசும் விரும்புகிறார்கள். பிரபலங்கள் யோகாசனங்களைச் செய்து தங்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்கள் ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சில சந்தர்ப்பங்களில் யோகா செய்வது கடினம் என்று சிலர் கூறுகிறார்கள். நீங்கள் பயிற்சி செய்தால், கடினமான யோகாசனங்களை கூட செய்யக்கூடிய ஒரு நிலையை நீங்கள் அடைவீர்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  சிலர் இதற்கு முன் யாரும் செய்யாத வகையில் யோகா செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் சிலர் யாரும் எதிர்பாராத யோகாசனங்களை செய்து பலரின் பாராட்டுகளை பெற முயற்சிகின்றனர். முறையான பயிற்சியும், உரிய பாதுகாப்படன் அதனை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதுவே உங்களுக்கு ஆபத்தாக முடியும்.

  Also Read : மாமியார் வீட்டிற்குள் நுழைந்தவுடன் மருமகளின் அதிர்ச்சியூட்டும் செயல் - வைரல் வீடியோ

  அதுப்போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளம் பெண் ஒருவர் மேஜை மீது இருக்கும் மதுப்பாட்டிலில் அமர்ந்தவாறு யோகாசனம் செய்ய முயற்சிகிறார். ஆனால் மதுப்பாட்டில்கள் நகர்ந்தன. இதனால் அந்த பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகிறார்.  பொதுவாக யோகாசானம் என்பது தரையில் துணியை விரித்து தான் செய்வார்கள். ஆனல் சிலர் தங்களது தனித்துவத்தை காட்ட வேண்டுமென்ற தீராத மோகத்தால் இதுப்போன்று விநோத முடிவு விபரீதத்தில் முடிவடிடைகிறது.

  இந்த வீடியோவை பார்த்த சிலர் அந்த பெண்ணை வெகுவாக விமர்சித்து வருகின்றனர். உடலுக்கு ஆரோக்கியம் தரும் யோகா போன்ற சிறந்த பயிற்சிகளை மதுப்பாட்டில் மீது செய்தால் இதுதான் நேரிடும் என்று தங்களது கருத்துகளை தெரிவித்து கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

  Also Read : அவிநாசியை கலக்கும் அமால் டுமால் ஆட்டோ.. - கவனம் ஈர்க்கும் தன்னம்பிக்கை மனிதர்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: