• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • நாயை கொடுமை படுத்திய இளைஞருக்கு கர்மாவை காட்டிச் சென்ற பசுமாடு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

நாயை கொடுமை படுத்திய இளைஞருக்கு கர்மாவை காட்டிச் சென்ற பசுமாடு - இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

இணையத்தில் வைரலாகும் வீடியோ

Viral Video : இளைஞர் ஒருவர் நாயின் காதினை பிடித்து இழுத்து கொடுமை படுத்துகிறார். இதனை கண்டு பசு மாடு ஒன்று ஓடி வந்து காப்பாற்ற முற்படுகின்றது.

  • Share this:
    கர்மம் அல்லது வினைப்பயன் என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றாற்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இதனை தமிழில் ”வினைப்பயன்” என்றும் கூறுவர்.

    கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் அல்லது கர்மவினை ஆகும். அவரவர் கர்மம் அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது நம்பப் படுகின்றது. இதனை உறுதி படுத்தும் விதமாக பல சம்பவங்கள் நமது வாழ்வில் நடந்தாலும் தற்போது இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அந்த வீடியோவில் இளைஞர் ஒருவர் நாயின் காதினை பிடித்து இழுத்து கொடுமை படுத்துகிறார். இதனை கண்டு பசு மாடு ஒன்று ஓடி வந்து காப்பாற்ற முற்படுகின்றது. வாயில்லா விலங்குகளுக்கு விலங்குகளே துணை என்பது போல் இந்த வீடியோ உள்ளது.



    இந்த வீடியோவை இந்திய வனத்துறை அதிகாரியான சுசந்தா நந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கர்மா என தலைபோடு பகிர்ந்துள்ளார். இதே போன்று இணையத்தில் மற்றும் ஒரு வீடியோ வைரலாகி வருகின்றது. குரங்கு ஒன்று இளைனரிடம் கண்ணாடியை திருப்பி கொடுக்க புரூட்டியை வாங்கி கொண்ட செயல் இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் , குரங்கு ஒன்று செடிகளுக்காக வைக்கப்பட்டுள்ள கூண்டின் மேலே அமர்ந்தவாறு உள்ளது. அதனின் கைகளில் கண்ணாடி உள்ளது. அருகில் இருந்த இளைஞர் ஒருவர் கண்ணாடியை குரங்கிடம் இருந்து வாங்க நூதன முறை ஒன்றை கையாள்கிறார். அவர் ஒரு மாம்பழ ஜூஸ் ஒன்றை வாங்கி வந்து அதனை குரங்கிடம் நீட்டுகிறார். அதனை பெற்றுக்கொண்ட குரங்கு தனது கைகளில் வைத்து இருந்த கண்ணாடியை கீழே தள்ளி விட முயற்சி பின்னர் அதனை தனது கைகளால் எடுத்து மனிதரிடம் கொடுக்கின்றது. இந்த வீடியோ இணையத்தில் பலரையும் நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.



    குரங்கு பசியை போக்க மனிதரிடம் நடத்திய டீலிங் சூப்பர் என பலரும் நகைச்சுவையாக இந்த வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: