Home /News /trend /

எல்லாவற்றுக்கும் மாமியார், மாமனாரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா? - டிவிட்டரில் பொருமிய பெண்ணின் பதிவு வைரல்..

எல்லாவற்றுக்கும் மாமியார், மாமனாரிடம் கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா? - டிவிட்டரில் பொருமிய பெண்ணின் பதிவு வைரல்..

Trending | ஒரு பெண்ணின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அதன் வேறுபாடு சிலரது வாழ்க்கையில் வெளிப்படவே தெரியும் வண்ணம் அமையும்.

Trending | ஒரு பெண்ணின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அதன் வேறுபாடு சிலரது வாழ்க்கையில் வெளிப்படவே தெரியும் வண்ணம் அமையும்.

Trending | ஒரு பெண்ணின் திருமணத்திற்கு முந்தைய வாழ்க்கைக்கும், திருமணத்திற்கு பிந்தைய வாழ்க்கைக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு. அதன் வேறுபாடு சிலரது வாழ்க்கையில் வெளிப்படவே தெரியும் வண்ணம் அமையும்.

பெரும்பாலும் திருமணத்திற்கு முன்பாக ஒரு பெண் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டும் என்றாலோ அல்லது தன் மனதுக்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றாலோ, தன்னுடைய தாய், தந்தையரிடம் அதுகுறித்த தகவலை சொல்லிவிட்டு செல்வார். அதாவது, பெரும்பாலான நேரங்களில் பெற்றோரின் அனுமதி தேவைப்படாது.

அதுவே திருமணம் செய்த பிறகு பெண்ணின் வாழ்க்கை தலைகீழாக மாறிவிடும். யாரையேனும் சந்திக்க வேண்டும் என்றாலோ அல்லது தன் மனதிற்கு பிடித்த விஷயத்தை செய்ய வேண்டும் என்றாலோ கணவர் வீட்டில் அதற்கு அனுமதி பெற வேண்டும். சும்மா தகவல் சொல்லிவிட்டு செய்துவிட முடியாது. குறிப்பாக, மாமியார் அல்லது மாமனாரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக இருக்கும்.

ஏதோ ஒருமுறை தகவலை சொன்னோம், செய்தோம் என்றெல்லாம் இருக்காது. எந்த விஷயம் என்றாலும் நீங்கள் ஒருமுறைக்கு, இருமுறை கெஞ்ச வேண்டியிருக்கும். குறிப்பாக, மாமியாரிடம் அனுமதி பெறாமல் நீங்கள் ஒரு துரும்பை கூட கிள்ளிப் போட முடியாது. அந்த அளவுக்கு கட்டுப்பாடுகள் நிறைந்ததாகவே இந்திய கலாசாரத்தில் மாமியார் - மருமகள் உறவுநிலை நீடித்து வருகிறது.

Read More : 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை போலவே நிஜத்தில் ஒரு சம்பவம்! க்ளைமேக்ஸ் தான் வேற


டிவிட்டரில் பொறுமிய பெண்

முன்பெல்லாம் மாமியார் கொடுமை குறித்து ஒரு பெண் தன்னுடைய பிறந்த வீட்டில் உள்ள உறவுகளிடம் சொல்லி புலம்பவதுடன், அவர்கள் அளிக்கும் ஆறுதலில் தன்னை தேற்றிக் கொள்வார். ஆனால், இது சமூக ஊடகங்கள் கோலோச்சும் 20ஆம் நூற்றாண்டு அல்லவா! எதையும் பெண்கள் தன் மனதில் பூட்டி வைத்து புழுங்கிக் கொண்டிருப்பதில்லை. சமூக வலைதளங்களில் தங்களுடைய பிரச்சினைகளை, தாங்கள் எதிரொள்ளும் அடக்குமுறைகளை பொத்தென்று போட்டு உடைத்து விடுகிறார்கள்.

இதுபோன்ற சமயங்களில் சக மனிதர்கள் அளிக்கும் ஆறுதலும், தைரியமும் அந்தப் பெண்களுக்கு ஊக்கம் அளிக்கின்றன. பிரச்சினையை எப்படி அணுக வேண்டும், எப்படி சமாளிக்க வேண்டும் என்ற படிப்பினையை கற்றுக் கொடுக்கின்றன. ஆகவே தான் குடும்ப பிரச்சினைகள் குறித்து சமூக வலைதளங்களில் இன்றைக்கு பெண்கள் வெகு இயல்பாக பேசத் தொடங்கியுள்ளனர். டிவிட்டரில் இதுபோல அண்மையில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவு வைரல் ஆகியிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் கெஞ்ச வேண்டுமா?

அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண் நீரு நாகராஜன் டிவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது முந்தைய திருமண வாழ்க்கை குறித்து சில சமயம் நினைத்துப் பார்க்கிறேன். சின்ன, சின்ன விஷயங்கள் கூட என் மனதில் மிகுந்த கவலையை ஏற்படுத்துவதாக அமைந்தன. என்னுடைய மச்சினிச்சி அமெரிக்கா வருகிறார். நான் அவளை சந்திக்கலாமா? என அனுமதி வாங்க வேண்டியிருந்தது.

எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. நீங்களும் (மாமியார் - மாமனார்) திருமணத்திற்கு வருகிறீர்களா? என கேட்க வேண்டியிருந்தது. ஒவ்வொரு விஷயத்திலும் பொறாமை மேலோங்கி நிற்கும். ஒவ்வொரு விஷயத்திற்கும் கெஞ்சி, கூத்தாட வேண்டியிருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார். 

டிவிட்டரில் இந்தப் பதிவு வைரல் ஆகியுள்ள நிலையில், இதேபோல மாமியார் - மாமனார் கொடுமைகளை எதிர்கொண்ட அல்லது எதிர்கொண்டு வரும் பெண்கள் பலரும் தங்களுடைய மனக் குமுறல்களை கொட்டத் தொடங்கி விட்டனர். ஆலியா வாஹீத் என்ற பெண் பதிவு செய்துள்ள கமெண்டில், “என்னுடைய பிறந்த வீட்டுக்கு சென்று வருகிறேன் என அனுமதி கேட்பதற்கு தைரியம் இல்லாமல் இரண்டு நாட்கள் தூக்கமின்றி தவித்தேன். அது இளமைக் காலத்தில் நடைபெற்றது. ஆனால், இப்போதெல்லாம் நான் கோபக்கார பெண்ணாக மாறிவிட்டேன். இப்போது என்னைப் பார்த்தும் எதுவும் சொல்ல யாருக்கும் தைரியமில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral

அடுத்த செய்தி