ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இது என்ன மேஜிக்கா? தக்காளி லோடு ஏத்தும்போது தனியா பறக்கும் கூடை.. வைரல் வீடியோ!

இது என்ன மேஜிக்கா? தக்காளி லோடு ஏத்தும்போது தனியா பறக்கும் கூடை.. வைரல் வீடியோ!

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோவில் தூக்கி வீசும் தக்காளி அடங்கிய பக்கெட் அப்படியே ட்ரக்கில் விழாமல் அதிலிருக்கும் தக்காளி மட்டுமே விழுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

 சோஷியல் மீடியாக்களில் பல்வேறு வகையான மற்றும் வித்தியாசமான வீடியோக்கள் வைரலாவது சகஜம். மனதை கவரும் வீடியோக்கள் கோடிக்கணக்கான நெட்டிசன்களை சென்றடைய அதிக நேரம் எடுப்பதில்லை.

பலருக்கும் பலவிதமான திறமை இருக்கிறது, இதில் பலரது திறமை அவர்கள் செய்யும் வேலைகளை எளிதாக்கி நம்மையும் கவர்கிறது. உதாரணமாக பரோட்டாவை தூரத்திலிருந்து தூக்கி எறிந்து சரியாக அவற்றை தட்டில் விழ வைப்பது, கண்ணாடி கிளாஸை தூக்கி போட்டு டீ ஆற்றுவது என பலவிதமான திறைமைகளை நாம் பார்த்து வியந்திருக்கிறோம்.

இது போன்ற வீடியோக்கள் வைரலாவதோடு அவர்கள் வேலை செய்யும் கடையையும் ஆன்லைனில் பிரபலமாக்கி விடுகின்றன. தற்போது இதுபோன்ற ஒரு வீடியோ ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால் இந்த வீடியோவில் இருக்கும் நபர் கடைகளில் எதுவும் வேலை செய்யவில்லை. மாறாக வெறுமனே ஒரு ட்ரக்கில் தக்காளி லோடை ஏற்றுகிறார். அப்படி என்றால் சிறப்பு எதுவும் இல்லாமலா இந்த வீடியோ வைரலாகியுள்ளது என்று கேட்கலாம்.!

Read More : ”செல்லத்தை தூக்கிட்டு வாங்க”... வயலில் இறங்கி வேலை பார்க்கும் நாயின் வைரல் வீடியோ!

ஆனால் அந்த நபர் தக்காளியை ட்ரக்கில் நிரப்பும் முறை காரணமாக வைரலாகி இருக்கிறார். சமீபத்தில் இன்ஸ்டாவில் சாகர் என்ற யூஸரின் அக்கவுண்ட்டில் இருந்து வெளியாகி இருக்கும் வீடியோவில், ஒரு விவசாயி வயலில் நின்று தக்காளிகள் நிறைந்த வாளிகளை உயரமான ட்ரக்கில் ஏற்றும் வேலையில் ஈடுபட்டிருப்பதை காட்டுகிறது. இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அந்த மனிதன் மிகவும் எளிதாக தக்காளி நிறைந்த பக்கெட்டை ட்ரக்கை நோக்கி வீசுகிறார். ஆனால் இவர் இந்த விஷயத்தில் மிகவும் திறமையாக செயல்படுகிறார். எப்படி என்றால் இவர் தூக்கி வீசும் தக்காளி அடங்கிய பக்கெட் அப்படியே ட்ரக்கில் விழாமல் அதிலிருக்கும் தக்காளி மட்டுமே விழுகிறது. தக்காளி இல்லா காலி பக்கெட் கீழே வயலில் விழுகிறது.

இவர் வீசும் பக்கெட்களில் இருக்கும் ஒவ்வொரு தக்காளியும் சிந்தாமல், சிதறாமல் நேரடியாக இடதுபுறத்தில் உள்ள ட்ரக்கிலும், காலியாகும் பக்கெட் வலதுபுறத்திலும் தரையில் விழும் வகையில் அந்த நபர் மிக லாவகமாக பக்கெட்டை வீசுகிறார். இவரின் இந்த அட்டகாசமான த்ரோவை பார்த்த நெட்டிசன்கள் வியப்படைந்துள்ளனர். உற்சாகத்தில் உள்ளனர். 'அர்னால்டின் சக்தி, ஐன்ஸ்டீனின் மூளை' என்ற கேப்ஷனில் இந்த வீடியோ ஷேர் செய்யப்பட்டுள்ளது. ட்விட்டரில் ஷேர் செய்யப்பட்டட சில நிமிடங்களில் வீடியோ கிட்டத்தட்ட 10 மில்லியன் வியூஸ்களை கடந்தது மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்ஸ் மற்றும் லைக்ஸ்களை சோஷியல் மீடியாக்களில் பெற்று வருகிறது.

பல யூஸர்கள் இவர் தக்காளி பக்கெட்டை வீசி ட்ரக்கில் ஏற்றும் செயல் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைலை ஒத்ததாக இருப்பதாக கூறி, சிவாஜி திரைப்படத்தில் ரஜினி பபுள் கம் சாப்பிடும் காட்சியை ஷேர் செய்து வேடிக்கையாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர். கூடையை ட்விஸ்ட் செய்து வீசுவதே இதற்கு காரணம் எனவும் சிலர் குறிப்பிட்டுள்ளனர்

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral