இரண்டு இரயில்களின் நடுவே குதிரை ஒன்று வேகமாக ஓடிச் சென்று இறுதிவரை ரயில்களின் வேகத்தில் ஈடு கொடுத்து நிற்காமல் ஓடும் வீடியோ ஒன்று இணையவாசிகள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் குதிரை ஒன்று ரயில்களின் நடுவே ஓடிக்கொண்டிருக்க பயணிகள் குதிரையை பின் தொடர்ந்து ஓடு ஓடு என கூச்சலிடுகின்றனர். இணையத்தில் பலரும் இந்த வீடியோவை கண்டு உள்ளனர். இதுவரை 12.5 லட்சம் விருப்பங்கள் மற்றும் 3.2 லட்சம் பேர் மறு ட்வீட் செய்துள்ளனர்.
घोड़ा 2 ट्रेनों के बीच फंस गया. उसे दौड़ना आता था, रास्ता बदले बिना दौड़ता रहा और अंत में बाहर निकल आया.
छोटे से वीडियो में मानो ज़िन्दगी का सबक है. मुश्किलों के बीच फंसकर विचलित ना हो, बस खुदपर भरोसा रख के आगे बढ़ते रहो. pic.twitter.com/pXrd69KYlO
குதிரை கி.மு. 4000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதனால் பழக்கப்படுத்தப்பட்ட ஒரு விலங்கு. இருபதாம் நூற்றாண்டு வரை குதிரை, மனிதனின் போக்குவரத்துக்கும், மேற்குலக நாடுகளில் ஏர் உழுவதற்கும் உதவியாக இருந்தது. சில பகுதி மக்களின் உணவாகவும் இது இருந்துள்ளது. பண்டைய அரசுகளின் படைகளில் குதிரைப்படை இன்றியமையாத ஒன்றாக இருந்துள்ளது.
குதிரைகளைக் கொண்டு பந்தயங்களும் நடத்தப்படுகின்றன. இதன் சதை, தோல், எலும்பு, முடி மற்றும் பல் போன்றவை பல்வேறு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன. குதிரைகள் மிக வேகமாக ஓட வல்லவை. நின்று கொண்டே தூங்க வல்லவை.
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.