எவ்வளவு திட்டினாலும் ஒரு ஆண் சைலண்ட்டா இருக்கானே ஏன்..? பெண்ணின் வைரல் வீடியோ

எவ்வளவு திட்டினாலும் ஒரு ஆண் சைலண்ட்டா இருக்கானே ஏன்..? பெண்ணின் வைரல் வீடியோ
  • Share this:
குடும்பத்தில் மிகப்பெரிய தூணாக இருந்து அனைவரையும் காப்பது பெரும்பாலும் ஆணாகதான் இருக்கிறான். அப்பா, அம்மா, சகோதர சகோதரிகள், மனைவி, பிள்ளைகள் , உறவினர்கள் என அனைவரையும் தாங்கி பிடிக்கும் ஒரு ஆணுக்காக அந்த குடும்பம் அக்கறையை காட்ட தவறுவதில்லை.

வெளியில் வேலைக்கு செல்லும் ஆண்கள் பொதுவாக தாங்கள் சந்திக்கும் துயரங்களை குடும்பத்தில் பகிர்ந்துகொள்வதில்லை. அவர்களோடு மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்து சந்தோசப்படுத்திக் கொண்டிருப்பான்.

வீட்டில் ஹீரோவாக இருந்தாலும், பணி இடத்தில் சில நேரங்களில் திட்டும் வாங்க நேரிடும். அங்கு அந்த ஆண் எடுக்கும் முடிவு பெரும்பாலும் அடங்கி போவதாக இருக்கும். தன்னை நம்பி குடும்பம் இருப்பதால் இருக்கும் வேலையை தக்கவைக்க பணிச்சூழலில் அனுசரித்து செல்வதை தவிர வேறு ஏதும் செய்துவிடமாட்டான்.


ஆணின் இந்த சூழலை, ஒரு பெண் தன்னுடைய டிக்டாக் வீடியோவில் எடுத்துரைக்கும் பாங்கு, அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

காண:

First published: November 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்