ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

அக்கா என்பவள் எப்போதும் இன்னொரு தாய் தான்... வைரலாகும் க்யூட் வீடியோ

அக்கா என்பவள் எப்போதும் இன்னொரு தாய் தான்... வைரலாகும் க்யூட் வீடியோ

வைரலாகும் குழந்தையின் வீடியோ

வைரலாகும் குழந்தையின் வீடியோ

Viral Video | இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது முதல் குழந்தை அதனை அரவணைப்பதும், வரவேற்பதும் காண்பதற்கே மகிழ்ச்சியூட்டும் காட்சியாக இருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  நீங்கள் சகோதரர் சகோதரிகளுடன் பிறந்தவர்களானால் இந்த பதிவு கட்டாயம் உங்களுக்குத் தான்..இதில் உள்ள க்யூட்டான அக்காவை போன்றவர்களா நீங்கள் அல்லது சுட்டித்தனமான தம்பியை போன்றவரா நீங்கள் என்பதை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்..

  குழந்தைகள் பற்றிய வீடியோ எப்போதும் இணையத்தை பலரின் கவனத்தை பெற தவறியதில்லை. அதிலும் இரண்டாவது குழந்தை பிறக்கும் பொழுது முதல் குழந்தை அதனை அரவணைப்பதும், வரவேற்பதும் காண்பதற்கே மகிழ்ச்சியூட்டும் காட்சியாக இருக்கும்.

  வளர்ந்த பிறகு நடக்கும் சண்டைகள் அட்டாகாசங்கள் என்பவை பெற்றோர்களால் கூட சமாளிக்க முடியாத நிலையில் இருக்கும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு விவரம் தெரியாத குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையை மற்றொரு குழந்தை அழகாக பொறுப்புடன் பார்த்துக் கொள்வது. இது தொடர்பான பல வீடியோக்கள் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது அப்படி ஒரு வீடியோ தான் இது.

  Read More : ராஜநாகத்தை அசால்ட்டாக தட்டி தூக்கிய சிறுவன் - மிரள வைக்கும் வீடியோ

  தன்சு யேகன் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இது மாதிரி கவனம் பெரும் வீடியோக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். அவர்தான் இந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். வீடியோவில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தையை அதன் சகோதரி பாசத்துடன் அரவணைத்து கையில் ஏந்தியுள்ளார். தனது இரண்டு கைகளால் டேப்லட்டை பிடித்திருக்க அந்த குழந்தையை தனது தோளோடு வைத்துள்ளார் அந்த சிறுமி. டேப்லட்டில் ஏதோ பார்த்தபடியே சிறுமி குழந்தையை பார்க்கும் பொழுது அந்த குழந்தை ஒரு வினாடி தன் அக்காவை பார்த்து க்யூட்டாக சிரிக்கிறது. வாயசைவில் அதற்கே உரிய மழலை சமிஞ்கையில் ஏதோ சொல்ல அந்த சிறுமி தனது மூக்கோடு குழந்தையின் மூக்கை செல்லமாக உரசி பாசத்துடன் நெற்றியில் முத்தமிடுகிறார்..அந்த குழந்தை கொஞ்சிய வண்ணம் அவர் மேல் சாய்ந்துக்கொள்கிறது.

  இந்த வீடியோவை தன்சு யேகன் ”சகோதர சகோதரிகளின் அன்பு” என்ற கேப்ஷனோடு பதிவிட்டுள்ளார்.  சுமார் 2.5 மில்லியன் வரை பார்வையாளர்களை கடந்திருக்கும் இந்த வீடியோ நெட்டிசன்களால் பாராட்டப்பட்டு வருகிறது. லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அள்ளி தெளித்த வண்ணம் உள்ளனர். ’’அவன் கண்களிலும் புன்னகையிலும் காதலைப் பாருங்கள். பொன்னான தருணங்கள்.” என்றும் எங்கிருந்து இது மாதிரியான விடியோக்களை நீங்கள் பெறுகிறீர்கள் என்றும் கேட்ட வண்ணம் உள்ளனர்.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral, Viral Video