மும்பையின் அஸ்டாகுரு ஏல மையத்தில் (AstaGuru auction house) சமீபத்தில் ஆன்லைனில் நடைபெற்ற ஏலத்தில் மிகவும் அரிதான முத்து நெக்லஸ் ஒன்று சுமார் ரூ.6.24 கோடிக்கு ஏலம் போன சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
இந்த நகைகள் AstaGuru-வின் 'பரம்பரை நகை வெள்ளி & டைம்பீஸ்கள்' சேகரிப்பின் ஒரு பகுதியாகும். மேலும் இது மிகவும் மதிப்புமிக்க இயற்கை முத்துக்களால் ஆனது. மிகவும் காஸ்ட்லியான இந்த நெக்லஸ் இரண்டு வெவ்வேறு நிழல்களை பெற்ற இயற்கையான உப்பு நீர் முத்துகளை கொண்டுள்ளது. இது மூன்று வரிசை முத்துக்களை உள்ளடக்கியது, மேலும் இவை faceted crystal discs-களுடன் இணைக்கப்பட்டுள்ளன. முத்துக்களின் அரிதான தன்மை மற்றும் சந்தையில் அவற்றின் தேவை ஆகியவை அவற்றின் மதிப்பை அதிக அளவில் உயர்த்துகின்றன. பொதுவாக, ஒரு முத்தின் மதிப்பு அதன் வடிவம், பளபளப்பு, வகை, நிறம், மேற்பரப்பு தரம் மற்றும் அளவு போன்ற அம்சங்களைப் பொறுத்தது.
இதனிடையே ஏலத்தின் சிறப்பம்சமாக இருந்த மூன்று வரிசை இழை இயற்கையான முத்து நெக்லஸ் ரூ. 6.24 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இந்த மிக பெரிய தொகை, இரண்டு நாள் ஏலத்தில் பெறப்பட்ட மொத்த ரூ.19.92 கோடியில் கிட்டத்தட்ட 35% ஆகும். இந்த நெக்லஸ் SSEF சான்றிதழுடன் இணைக்கப்பட்டுள்ளது. மிகவும் அரிதாக கிடைக்கும் விண்டேஜ் நகைகளை எப்படியாவது பெற சேகரிப்பாளர்கள் எப்போதும் இதுபோன்ற வாய்ப்புகளைத் தேடுகிறார்கள் என்பதை இந்த ஏல முடிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்று AstaGuru auction house-ன் நகை நிபுணர் ஜெய் சாகர் கூறி இருக்கிறார்.
Read More : யார் சுட்ட தோசை, வெயில் சுட்ட தோசை.. வைரலாகும் வீடியோ - நெட்டிசன்களின் கருத்து என்ன?
அதன் வியக்கவைக்கும் டிசைன் அரிதானது என்பதை தவிர, நகைகளின் அளவும் அதன் உச்ச மதிப்புக்கு பங்களிக்கிறது. இந்த நெக்லஸ் அதன் அளவு காரணமாகவே மிகவும் அரிதானது என்று கூறப்படுகிறது. ஏல இல்லத்தின் தகவலின்படி, இயற்கையான முத்து எடை 2485.73 chau / 181 pcs ஆகும், அதே சமயம் அதோடு இணைக்கப்பட்டிருக்கும் வைரத்தின் எடை தோராயமாக 5.70/37 pcs ஆகும். பொக்கிஷமான அரிய இயற்கை முத்து மணிகளின் அளவு 5.25 மிமீ முதல் 15.60 மிமீ விட்டம் வரை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இயற்கை முத்துக்கள் தவிர பர்மிய மாணிக்கங்கள், ஜாம்பியன் மரகதங்கள் மற்றும் உயர்தர வைரங்கள் கொண்ட நகைகள் ஆகியவையும் ஆன்லைன் ஏலத்திற்கு விடப்பட்டன. இது தவிர மற்றொரு நேர்த்தியான முத்து நெக்லஸ் AstaGuru auction house-ல் ரூ.1.48 கோடிக்கு விற்கப்பட்டது. 619.50 chau/448 pcs எடை கொண்ட ஐந்து வரிசை நேர்த்தியான இயற்கை முத்துக்களை இந்த நகை கொண்டுள்ளது. இது வைரங்களுடன் தங்கத்தில் அமைக்கப்பட்ட (வைரம் மற்றும் வைர பிடியுடன் சேர்ந்து) ஆர்ட்ஸ் டெகோ டெர்மினல்களையும் கொண்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.