Home /News /trend /

பள்ளியில் 26 முறை ஃபெயிலான நபருக்கு மாலை அணிவித்து மரியாதை - நடந்தது என்ன?

பள்ளியில் 26 முறை ஃபெயிலான நபருக்கு மாலை அணிவித்து மரியாதை - நடந்தது என்ன?

பள்ளியில் 26 முறை ஃபெயிலான நபருக்கு மாலை அணிவித்து மரியாதை

பள்ளியில் 26 முறை ஃபெயிலான நபருக்கு மாலை அணிவித்து மரியாதை

உயர்நிலைப் பள்ளியில் 26 முறை தோல்வியடைந்து உலக சாதனை படைக்கப் போவதாக ஒருவர் கூறிய பதிவு தான் அது.

    இன்டர்நெட் என்பது இன்று வைரலான பல்வேறு பதிவுகளால் நிரம்பி வழிகிறது. இவற்றில் பெரும்பாலானவை உண்மை தன்மை இல்லாமல் வைரலாகின்றன. சமூக ஊடக தளங்களில் உள்ள ட்ரோல் அக்கவுண்ட்கள் பாதி உண்மையைப் பகிர்ந்து கொள்வதாலும், மக்கள் முதலில் எதைப் பார்த்தாலும் நம்பத் தொடங்குவதாலும் இது பெரும்பாலும் வைரலாக தொடங்குகின்றன. இது போன்ற பல நிகழ்வுகளை நாம் அன்றாடம் இன்டர்நெட்டில் பார்த்து வருகிறோம்.

    அந்த வகையில், இப்படியொரு வினோத நிகழ்வு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. உயர்நிலைப் பள்ளியில் 26 முறை தோல்வியடைந்து உலக சாதனை படைக்கப் போவதாக ஒருவர் கூறிய பதிவு தான் அது. இதை பார்க்கும் யாராக இருந்தாலும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் நிச்சயம் ஏற்பட கூடும்.
    எனவே, இந்த வைரலான பதிவின் பின்னணியில் உள்ள உண்மையை பற்றி இனி தெரிந்து கொள்வோம்.

    உத்தரபிரதேச கல்வி வாரியம் சமீபத்தில் உயர்நிலை பள்ளி மாணவர்களுக்கான முடிவுகளை அறிவித்தது. அந்த முடிவுகள் வெளியான நிலையில், உமேஷ் சந்திர சதி என்பவர் தனது பேஸ்புக்கில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “ உயர்நிலைப் பள்ளியில் தொடர்ந்து 26-வது முறையாக தோல்வி பெற்ற எனக்கு இன்று கிராம மக்கள் அனைவரும் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உங்கள் அனைவருக்கும் நன்றி." என்று குறிப்பிட்டு பதிவிட்டு உள்ளார்.

    Also Read : 3000-ம் ஆண்டு பழமையான கோவிலின் நிலத்தடி பாதையை கண்டு பிரமித்த தொல்பொருள் ஆய்வாளர்கள்

    இந்த வைரலான பதிவை ஷேர் செய்தவர் அதனுடன் மதிப்பெண் பட்டியலையும் சேர்த்துள்ளார். அத்துடன் மற்றொரு படத்தில் இரண்டு பெண்கள் அவருக்கு மாலை சூட்டுவதாக உள்ளது. இந்த நிகழ்வில் உள்ள உண்மையை ஆழமாக தோண்டி எடுத்து பிறகு அந்த பதிவு போலியானது என்பது தெரிய வந்தது. உமேஷ் சந்திர சதி பகிர்ந்த படம் மிகவும் பழையது, அது இப்போது மீண்டும் பகிரப்பட்டுள்ளது தான் இதிலுள்ள திருப்புமுனை. இது முதலில் 31 அக்டோபர் 2021 அன்று பகிரப்பட்டது, பின்னர் மீண்டும் 1 நவம்பர் 2021 அன்று பகிரப்பட்டது. இந்த பதிவுகளின் கமெண்ட் பிரிவானது இந்த உண்மையைத் தெளிவாகக் காட்டுகிறது.

    மேலும் ஊடக அறிக்கையின்படி, மக்களை சிரிக்க வைப்பதற்காக மட்டுமே உமேஷ் அந்த பதிவைப் பகிர்ந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த பதிவை பதிவிட்ட 24 மணி நேரத்திற்குள் சமூக ஊடக தளங்களில் மிகவும் வைரலானது. அத்துடன், இந்தப் படத்தில் காணப்படும் மார்க்ஷீட் புகைப்படம் சுமார் 3 முதல் 4 ஆண்டுகளுக்கு முன்பு உமேஷுக்கு அனுப்பப்பட்ட ஒன்று.

    இந்த உமேஷ் என்பவர், உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியில் உள்ள பிபால்கோட்டி கிராமத்தில் வசிப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. 11 ஆம் வகுப்பு வரை படித்துள்ள இவர், தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்படியொரு வைரலான பதிவிற்கு காரணமானவரும் இவரே. இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று தான். இணையத்தில் பகிரப்படும் எந்த தகவலையும் அப்படியே நம்புவது சரியல்ல என்பது தான்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Trends, Viral

    அடுத்த செய்தி