சமீபத்தில் உபயோகப்படுத்தப்பட்ட மாஸ்க்கில் சிக்கிய ஒரு பறவையின் புகைப்படத்தைப் நெதர்லாந்தில் உள்ள ஒரு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் வைரலானது மட்டுமல்லாமல் இணையத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸைக் கையாளுவதற்காக மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகள் உலகில் உள்ள விலங்குகளுக்கு தீங்கு விளைவிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அப்புறப்படுத்தப்பட்ட முகக்கவசங்கள், கையுறைகள் மற்றும் பிற வகையான பிபிஇ பொருட்களிலிருந்து உருவாகும் கழிவுகள் விலங்குகளுக்கு ஒரு பிளாஸ்டிக் டைம் பாமாக செயல்படுவதாகவும், உலகின் சில பகுதிகளில் இந்த கழிவுகள் பல விலங்கினங்கள் உயிரிழப்பதாகவும் லண்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு தெரிவித்துள்ளனர்.
கடந்த சில காலமாக நடத்திய ஆய்வில், பயன்படுத்தப்பட்டு பின்னர் அப்புறப்படுத்தப்பட்ட ஒரு லேடெக்ஸ் கையுறையில் சிக்கியிருந்த ஒரு பெர்ச்சை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அதேபோல முகக்கவசங்களில் சிக்கியிருந்த நரிகள் மற்றும் பறவைகள் போன்ற விலங்குகளையும் இந்த குழு கண்டது. இதுதவிர ஒரு பென்குயின் வயிற்றில் மற்றும் பறவைகளின் கூடுகளில் அப்புறப்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர்.
அனிமல் பையாலஜி (Animal Biology) என்ற இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வறிக்கையில், விலங்குகள் மற்றும் பறவைகள் மீது பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு நடத்திய விஞ்ஞானிகள், இயற்கை பாதுகாப்பாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கோவிட் பாதுகாப்பு உபகரணங்களை சிறப்பாக அகற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதனால் பறவைகள் மற்றும் விலங்குகள் மீது இவை ஏற்படுத்தும் தாக்கத்தை குறைக்க முடியும். விலங்குகள் மற்றும் பறவைகள் கழிவுகளை எங்கு எதிர்கொள்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் வனப்பகுதியில் விரிவான கண்காணிப்பை மேற்கொண்டனர்.
சமூக ஊடகங்கள், வலைத்தளம் மற்றும் செய்தித்தாள் நாளிதழ்கள் மூலம் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பிரேசில் முதல் மலேசியா வரையிலான பகுதிகளிலிருந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. வட அமெரிக்காவில் உள்ள கனடா வன பகுதிகளில் வசித்து வரும் நரிகள் மற்றும் பிற காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதில் பல உயிரினங்கள் முகக்கவசங்கள் அல்லது கையுறைகளில் சிக்கியிருப்பது அம்பலமாகியுள்ளது.
Also read... வெப்பமண்டல காடுகளின் மீட்பு வேகத்தை அதிகரிக்க காபி கழிவுகளைப் பயன்படுத்தலாம்: ஆய்வில் தகவல்!
இதுதவிர கடல் உயிரினங்களான சீகல்ஸ் மற்றும் நண்டுகள் போன்றவையும் இதேபோன்ற தலைவிதியைக் கொண்டிருந்தன. நிலத்தில் இருப்பதைப் போலவே, கடலில் உள்ள பாலூட்டிகளும் பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடுவதை ஆரம்பித்துவிட்டன. அதன்படி ஆராய்ச்சியாளர் ஒரு பென்குயின் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து ஆய்வு ஆசிரியர் லிசலோட் ராம்போனெட் கூறியதாவது, "வயிற்றில் பிளாஸ்டிக் சிக்குவதன் காரணமாகவும், பட்டினி கிடைப்பதாலும் பல்வேறு விலங்குகள் பலவீனமடைகின்றன" என்று கூறியுள்ளார்.
மேலும் இணை எழுத்தாளர் ஆக்-ஃப்ளோரியன் ஹைம்ஸ்ட்ரா கூறுகையில், நிலத்தில், நன்னீரில் மற்றும் கடல் நீரில் முதுகெலும்பு மற்றும் முதுகெலும்பு அல்லாத உயிரினங்கள் பெரும்பாலும் கொரோனா கழிவுகளில் சிக்கிக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஆய்வுக்குழு கோவிட்லிட்டர் (CovidLitter) என்ற வலைத்தளத்தை உருவாக்கியுள்ளனர். அதில் அப்புறப்படுத்தப்பட்ட கொரோனா கழிவுகளால் விலங்கினங்கள் பாதிக்கப்படுவதாகத் தோன்றும் எந்தவொரு காட்சிகளையும் பதிவுசெய்யுமாறு மக்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.