பர்சனல் ஹாபி என்பது பொதுவான சில விஷயங்கள் முதல் மிகவும் வினோத மற்றும் வழக்கத்திற்கு மாறானவை வரை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது தனிப்பட்ட நபர் ஒருவரின் ஆர்வம் மற்றும் ஈடுபாடு உள்ளிட்டவற்றை பொறுத்தது.
அந்த வகையில் பலரும் தங்களுக்கு பிடித்தமான அதே சமயம் மற்றவர்கள் பார்வையில் வினோதமாக தெரிகின்ற சில தனிடப்பட்ட பொழுதுபோக்குகளில் ஈடுபடுகிறார்கள். இவர்களில் ஒருவராக இருக்கிறார் ஜப்பான் நாட்டை சேர்ந்தவரான நெருனோ டெய்சுகி (Neruno Daisuki). நாம் செருப்பு அல்லது ஷூ போட்டு கொண்டு ரோட்டில் நடந்து செல்லும் போது பாதணிகளுக்கு அடியில் இருக்கும் சிறுசிறு இடைவெளிகளில் பல பொருட்கள் சிக்கும்.
சில நேரங்களில் அவற்றால் இடையூறு இருக்காது என்றாலும், நாம் அவற்றை பார்க்கும் போது பாதணிகளை கீழே வைத்து தேய்த்து அவற்றை எடுத்து விடுவோம். இல்லை என்றால் அதுபாட்டுக்கு இருக்கட்டும் என்று அப்படியே விட்டுவிடுவோம் அல்லவா.! ஜப்பானின் மங்கா ஆர்டிஸ்ட்களில் ஒருவரான இவர் தனது ஷூக்களின் அடிப்பகுதியில் சிக்கிய கூழாங்கற்களை சேகரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
மேலும் இவர் தான் நடக்கும் போது ஷூக்களின் அடிப்பகுதியில் சிக்கிய நிறைய கூழாங்கற்களை சேகரித்தும் வைத்துள்ளார். நாம் எல்லோரும் சாதாரணமாக கடந்து செல்ல கூடிய இந்த விஷயத்தை தனி ஹாபியாக நெருனோ டெய்சுகி செய்து வருவது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் இந்த வினோத பழக்கத்தை சுமார் 1 வருடத்திற்கும் மேலாக பின்பற்றி வருகிறார்.
இவரது சேகரிப்பில் ஷூ-வின் அடிப்பகுதியில் உள்ள துளைகளில் சிக்கிய சிறிய கண்ணாடி துகள்களும் அடங்கும். கடந்த ஒரு வருடமாக நெருனோ டெய்சுகி தனது ஷூவின் அடிப்பகுதியில் சிக்கிய ஒரு நட்ஸ் உட்பட சுமார் 179 கூழாங்கற்கள், 32 கண்ணாடி துகள்களை சேகரித்து வைத்துள்ளார். மேலும் அவர் தனது வினோத கலெக்ஷன்களை ட்விட்டரிலும் ஷேர் செய்து உள்ளார்.
Also Read : போட்டிக்கு நீங்களும் வரலாம்..! 8 கிலோ சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டால் ரூ.51,000 பரிசு
ட்விட்டரில் இது பற்றி கூறியுள்ள நெருனோ டெய்சுகி, இந்த சேகரிப்பை செய்ய தனக்கு நிறைய முயற்சிகள் தேவைப்படுவதாகவும், சில நேரங்களில் கூழாங்கற்கள் மிகவும் மோசமாக ஷூவின் அடியில் சிக்கி கொள்ளும் போது அவற்றை அகற்ற ஒரு டூத்பிக்-ஐ பயன்படுத்த வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். இந்த வினோத ஹாபி எப்படி ஏற்பட்டது என்றும் கூறி இருக்கிறார் டெய்சுகி.
1 வருடத்திற்கு முன் தான் புதிதாக வாங்கிய ஸ்னீக்கர்களின் பின்புறத்தில் உள்ள பள்ளத்தில் சிக்கிய கூழாங்கற்களை அகற்றும் போது, அவற்றை தூக்கி எறிந்து வீணாக்குவதை விட, அவற்றை சேகரிப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்ற எண்ணம் ஏற்பட்டதாக கூறி உள்ளார்.
Also Read : ஓனரை கட்டிப்பிடித்து கதறி கதறி அழுத ஆடு... கல்லான மனதையும் கலங்க வைக்கும் வீடியோ
கடந்த ஆண்டு கோவிட் லாக்டவுனின் போது சும்மா ஒரு பொழுது போக்குக்காக இந்த சேகரிப்பு முயற்சியை தொடங்கியதாகவும், ஆனால் போக போக ஆர்வம் அதிகரித்ததால் வித்தியாசமான இந்த செயலை தொடர்ந்ததாகவும் கூறி இருக்கிறார். தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடை ஒன்றுக்கு செல்லும் போது ஷூவின் பின்புறம் அதிக பொருட்கள் சிக்குவதாகவும், மேலும் சேகரிக்க கூடிய பெரும்பாலான பொருட்கள் இந்த வழித்தடத்திலே தான் கிடைப்பதாகவும் அவர் கூறுகிறார்.
இதென்னடா சுவாரஸ்யமான பொழுதுபோக்கு என்று நீங்கள் மனதில் நினைப்பது புரியாமல் இல்லை..! என்ன செய்வது முதல் வரியில் சொன்னது போல பர்சனல் ஹாபி என்பது ஒருவரின் ஆர்வம் மற்றும் ஈடுபாட்டை பொறுத்தது அல்லவா?
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.