ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஒரு நிமிஷம் தலைச்சுற்ற வைக்கும் வைரல் புகைப்படம்...

ஒரு நிமிஷம் தலைச்சுற்ற வைக்கும் வைரல் புகைப்படம்...

Photo: Social Media

Photo: Social Media

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வரும் புகைப்படம் ஒன்று பார்ப்பவர்கள் அனைவரையும் குழப்பத்தில் ஆழத்தி உள்ளது.

  சமூக வலைதளமான ட்விட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றில் இந்த புகைப்படம் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. சிலர் இந்த புகைப்படத்தை என்னவென்று கண்டுபுடியங்கள் என்று பகிர்ந்து வருகின்றனர்.

  முதலில் பார்ப்பதற்கு காக்கா என்று அனைவரையும் நினைக்க வைக்கும். இது யாருக்கும் தெரியாதா என்று உற்றுப்பார்த்தால் படத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட் இருக்கிறது. ஆம் அது ஒரு பூனையின் புகைப்படம்.

  பூனை தலையை திரும்பி பார்க்கும் போது எடுத்த புகைப்படம் இது. ஆனால் பூனையின் ஒரு கண் தெளிவாகவும் திரும்பிய பாகம் காக்காவின் மூக்கு வடிவத்தில் இருப்பதால் பார்ப்பவர்கள் குழப்பமடைந்திருப்பார்கள். சாதரணமாக தான் எடுத்தது என்றாலும் சட்டென்று பார்ப்பவர்கள் யாராக இருந்தாலும் காக்கா என்று தான் நினைப்பார்கள்.

  முடிவில் இது பூனை என்று தெரிய வரும் போது தான் “நான் அப்பவே நினைச்சேன் பூனை எப்படி டைல்ஸ் உட்காந்திருக்கும் என்று யோசித்தேன்“ என்று சொல்லிக் கொண்டே செல்வார்கள்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trending, Viral