கண்கள் சரியாக உள்ளதா? இந்த புகைப்படத்தில் உள்ள ஒளியியல் மாயையைப் பார்க்கும்போது மனதில் தோன்றும் முதல் கேள்வி இதுதான். யுனைடெட் கிங்டமில் உள்ள லென்ஸ்டோர் சமீபத்தில் இந்த ஆப்டிகல் மாயையை உருவாக்கி கண்ணைக் குழப்பியது! நிறம் இல்லையா? எல்லோரும் இந்த வலையில் விழுவார்கள். 15 வினாடிகள் கிளியின் கண்களை உற்றுப் பார்த்த பிறகு, படம் கருப்பு மற்றும் வெள்ளை நிறமாக மாறும். ஆனால் நம் கண்களுக்கு அது வேறு விதமாக இருக்கும்.
கண்ணின் இந்த மாயை என்பது படத்தின் நீலப் பகுதிகள் இளஞ்சிவப்பு நிறமாகவும், இளஞ்சிவப்பு பகுதிகள் நீலமாகவும் இருப்பதைப் போன்ற ஒரு நுட்பம். ஏனென்றால், ஆப்டிகல் மாயை என்பது எதிர்மறைப் படத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு ஆகும், இது நீங்கள் பார்க்கும் வண்ணம் அசலில் இருந்து தலைகீழாக அல்லது வேறுவிதமாக மாறுகிறது.
Also Read : ஜோசியம் பார்க்கும் கிளியை பார்த்து இருப்பீங்க.. ஆனா இந்த மாதிரி கிளியை பார்த்து இருக்க முடியாது
தற்போதைய இணையத்தில் ஆப்டிகல் (Optical Illusion Image) படங்கள் வைரலாக பரவி வருகிறது. நம் கண்களுக்கு இருக்கும் இரண்டு வட்டங்கள் சுழல் போல்வது இருக்கும். உற்று நோக்கினால் அவை ஒரிடத்தில் அசையாமல் இருக்கும். இதுப்போன்ற படங்கள் நமது மனதின் வலிமையும், திறனையும் ஆராயும் படங்களாக கூட பயன்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.