Home » News » Trend

உறை கிணற்றில் மாட்டிக்கொண்ட நபர்... உயிரை காப்பாற்றிய தொப்பை - வீடியோ

சீனாவின் லுயோயாங் நகரத்தில் உறை கிணற்றில் மாட்டிக்கொண்ட நபர் தனது தொப்பையால் உயிர்பிழைத்துள்ளார்.

உறை கிணற்றில் மாட்டிக்கொண்ட நபர்... உயிரை காப்பாற்றிய தொப்பை - வீடியோ
உறை கிணற்றில் மாட்டிக்கொண்ட நபர்...உயிரை காப்பாற்றிய தொப்பை - வீடியோ
  • Share this:
சீனாவின் லுயோயாங் நகரத்தை சேர்ந்தவர் லியு. இவருக்கு வயது 28. மனநலம் பாதிக்கப்பட்ட லியு தனது வீட்டில் வைக்கப்பட்டுள்ள உறை கிணற்றில் குதித்துள்ளார்.

அவரது உடல் எடை அதிகமாக இருந்ததால் கிணற்றின் உள்ளே விழாமல் அவரது தொப்பை மாட்டிக்கொண்டு வயிற்றுக்கு மேல் உள்ள பகுதி முழுவதும் வெளியேவும், கீழ் பகுதி முழுமையும் உறைகிணற்றிலும் மாட்டிக்கொண்டுள்ளது.




பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஐந்து தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு சம்பவ இடத்திற்கு வந்து லியுவை வெளியில் எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் லியுவின் இடுப்பு பகுதியில் கயிற்றை கட்டி வெளியே இழுத்துள்ளனர். பின்னர் பாதுகாப்பாக வெளியில் வந்தார் லியு. இது தொடர்பாக தீயணைப்பு துறையினர் தெரிவிக்கையில், லியுவிற்கு தொப்பை இருந்ததால் மட்டுமே  உயிர்பிழைத்தார் என கூறியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
First published: August 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading