ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மறைந்திருக்கும் ஹெட்ஃபோனை கண்டுபிடிங்க பார்க்கலாம்... இதோ உங்களுக்கான ஒரு சவால்!

மறைந்திருக்கும் ஹெட்ஃபோனை கண்டுபிடிங்க பார்க்கலாம்... இதோ உங்களுக்கான ஒரு சவால்!

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூஷன்

கண்களை மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் கூட சோஷியல் மீடியாக்களில் அவை பெரும் வரவேற்பை பெறுகின்றன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஒளியியல் மாயை எனப்படும் ஆப்டிக்கல் இல்யூஷன்கள் ஒரு பொருள் அல்லது விஷயத்தை நமது மூளை எவ்வாறு உணருகிறது என்பதை அறிய பெரிதும் உதவுகிறது.

ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்களில் மறைந்திருக்கும் விஷயத்தை அல்லது புதிருக்கான விடையை சரியாக கண்டுபிடிப்பது என்பது, நீங்கள் அந்த ஆப்டிகல் இல்யூஷன் இமேஜை எப்படி பார்க்கிறீர்கள், உணருகிறீர்கள், சவாலுக்கான விடை எப்படி இருக்கும், எங்கே இருக்கும் என்பதை எவ்வாறு நீங்கள் கணிக்கிறீர்கள் உள்ளிட்ட பல விஷயங்களை அடிப்படையாக கொண்டது.

கண்களை மற்றும் மூளையை ஏமாற்றும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்தினாலும் கூட சோஷியல் மீடியாக்களில் அவை பெரும் வரவேற்பை பெறுகின்றன. இதற்கு காரணம் அவற்றுள் மறைந்திருக்கும் புதிரை கண்டுபிடிப்பதில் ஏற்படும் சுவாரசியம்தான். இதன் காரணமாக அடிக்கடி பல ஆப்டிகல் இல்யூஷன்கள் வைரலாகி வருகின்றன.

மேலும் ஆப்டிகல் இல்யூஷன்கள் நமது கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுவதோடு மூளை மற்றும் கண்களுக்கு ஒரே நேரத்தில் வேலை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாக மற்றும் உற்சாகமாக வைக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் நம் மூளைக்கு ஒரு சிறந்த பயிற்சி மட்டுமல்ல கண் பார்வை மற்றும் அறிவாற்றலை கூர்மைப்படுத்தவும் உதவுகிறது. ஒரு சில ஆப்டிகல் இல்யூஷன்களை பார்த்தாலே மறைந்திருக்கும் புதிரை ஈஸியாக கண்டுபிடித்து விடலாம் என மனதில் தோன்றும். இந்த எண்ணத்தோடு ஜாலியாக அந்த ஆப்டிகல் இல்யூஷனை உற்று பார்க்கும் போது தான் தெரியும் நாம் நினைத்தது தவறு என்று. அப்படிப்பட்ட ஒரு இமேஜை தான் இங்கே பார்க்க போகிறோம்.

சோப், டூத் பிரஷ், டிட்டர்ஜென்ட் மற்றும் ஹேர் ட்ரையர் உள்ளிட்ட பல பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட்டு வெவ்வேறு அலமாரிகளில் வைக்கப்பட்டுள்ள பாத்ரூம் செட்டப் இமேஜ் கொண்ட ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ் வைரலாகி வருகிறது. டாய்லெட் சீட்டிற்கு அருகில் சுவரில் தொங்கும் பாத்ரோப்ஸ் மற்றும் டவல்களையும் நம்மால் பார்க்க முடிகிறது. பாத்ரூமின் வாஷ்பேசின் அருகில் ஒரு வாஷிங் மெஷினும் உள்ளது. ஆனால் இவற்றுக்கு மத்தியில் இந்த பாத்ரூமில் ஒரு ஹெட்ஃபோனும் வைக்கப்பட்டுள்ளது. பாத்ரூமில் மறைந்திருக்கும் ஹெட்ஃபோனை நீங்கள் வெறும் 7 வினாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும். முடியுமா.!!

மேலே உள்ள இமேஜை பார்த்து விட்டீர்களா.? படத்தில் மறைந்திருக்கும் ஹெட்ஃபோனை கண்டறிய இப்போது முயற்சி செய்யுங்கள். இந்த சவாலில் வெல்வது உங்கள் கண்பார்வை எவ்வளவு நன்றாக இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும். 7 வினாடிகளில் இல்லாவிட்டாலும் 20 வினாடிகளுக்குள்ளாவது கண்டுபிடிக்க முடிகிறதா என முயற்சி செய்யுங்கள். இந்த இமேஜில் மறைந்திருக்கும் ஹெட்ஃபோனை இந்த இல்யூஷனை முயற்சித்த 2% பேர் மட்டுமே கண்டுபிடிக்க முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்களா.?

ஹெட்ஃபோனை கண்டுபிடிப்பது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால், விடையையே இங்கே நாங்கள் சொல்கிறோம். கேபினெட்டின் கீழ் அலமாரியில் உள்ள டிட்டர்ஜென்ட்டிற்கு பின்னால் மறைந்திருக்கிறது ஹெட்ஃபோன். இப்போது இமேஜை ஒருமுறை உற்று பாருங்கள். உங்களில் பெரும்பான்மையானவர்கள் இப்போது விடையை கண்டறிந்திருப்பீர்கள்.

ப்ளூ கலர் பேக்ரவுண்டிற்கு இடையில் மறைந்திருக்கும் ஹெட்ஃபோனை உங்களால் இன்னும் சரியாக அடையாளம் காண முடியவில்லை என்றால் கீழே விடை வட்டமிட்டுள்ள இமேஜை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

First published:

Tags: Trending, Viral