முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 3 விநாடிதான் அவகாசம்..! செம்மறியாட்டுக் கூட்டத்தில் மறைந்திருக்கும் ஓநாயை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்..!

3 விநாடிதான் அவகாசம்..! செம்மறியாட்டுக் கூட்டத்தில் மறைந்திருக்கும் ஓநாயை கண்டுபிடித்தால் நீங்க ஜீனியஸ்..!

வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன்

வைரலாகும் ஆப்டிகல் இல்யூசன்

நமது மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையிலான சில ஒளியியல் மாயை புகைப்படங்களை குறிப்பிட்ட விநாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் ஜீனியஸ் ஸிஸ்டில் நீங்கள் இடம்பிடித்துவிட்டீர்கள் என அர்த்தம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆப்டிகல் இல்யூசன் எனப்படும் ஒளியியல் மாயை புகைப்படங்கள் தான் இன்றைக்கு நெட்டிசன்களை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது. நமது மூளைக்கும், கண்களுக்கும் சவால் விடும் வகையிலான சில ஒளியியல் மாயை புகைப்படங்களை குறிப்பிட்ட விநாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் என்றால் ஜீனியஸ் ஸிஸ்டில் நீங்கள் இடம்பிடித்துவிட்டீர்கள் என அர்த்தம்.

இப்படியொரு ஒளியியல் மாயை புகைப்படம்தான் தற்போது இணையத்தில் வைரலாகி நெட்டிசன்களின் மூளையை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம் நாம் இப்போது பார்க்கும் புகைப்படத்தில் செம்மறி ஆடுகளின் கூட்டம் இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு நடுவில் தான், ஒரு ஓநாய் ஒன்று மறைந்துள்ளது. இதை நீங்கள் 3 விநாடிகளில் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், உங்களின் ஆளுமை மற்றும் மூளையின் செயல்திறன் சிறப்பாக உள்ளது என அர்த்தம். நீங்களும் இந்த போட்டியில் கலந்துக்கொண்டு ஓநாயைக் கண்டுபிடிக்க தொடங்கிவிட்டீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான சில டிப்ஸ்கள் இங்கே…

டிப்ஸ் 1 : உங்களுக்கு முன்னால் இருக்கும் ஒளியியல் மாயை புகைப்படத்தில் செம்மறி ஆடுகளின் கூட்டத்திற்குள் ஓநாய் ஒன்று மறைந்திருக்கிறது அல்லவா? நன்கு உற்று நோக்குங்கள். வலது புறமாகவே நீங்கள் ஓநாயை தேட ஆரம்பிக்கவும்.

நிச்சயம் ஆரம்பத்திலேயே புகைப்படத்திற்குள் மறைந்திருக்கும் ஓநாயை கண்டுபிடிக்கமுடியவில்லை. பலருக்கு மிகுந்த சவாலாகவே இருந்தது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூளையை கசக்க ஆரம்பித்துவிட்டனர். இந்தநிலை உங்களுக்கும் வரவேண்டாம் என்றால், உங்களின் தேடுதல் வேட்டையை தொடரவும். 3 விநாடிகளுக்குள் நீங்கள் கண்டுபிடித்துவிட்டால் நீங்கள் தான் ஜீனியஸ்...

Read More : குப்பைக் கூடையான வந்தே பாரத்... திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்!

3 விநாடிகளில் மறைக்கப்பட்ட ஓநாயை கண்டுபிடித்தீர்களா? இல்லையென்றால் இதோ உங்களுக்கான பதில் இங்கே....இந்த ஆப்டிகல் மாயை படத்தை உன்னிப்பாகப் பார்த்து, செம்மறி ஆடுகளுக்குள் மறைந்திருக்கும் ஓநாய் கண்டுபிடிக்க முயற்சிக்கவும். ஓநாய் கண்டுபிடிக்க மிகவும் தந்திரமானதாக தோன்றலாம், ஆனால் படத்தின் வலது பக்கத்தில் உள்ள விலங்கின் முகத்தைப் பார்த்தால், மறைந்திருக்கும் ஓநாயை உங்களால் கண்டுபிடிக்க முடியும். ஓநாயின் சாம்பல் தோல், வால், கால்கள், மூக்கு மற்றும் கண்கள் ஆகியவை செம்மறி ஆடுகளின் உடலுக்குள் மறைந்துள்ளன. இப்பொழுதாவது கண்டுபிடித்துவிட்டீர்களா? நிச்சயம் ஆம் என்று நினைக்கிறோம்.

இந்த புகைப்படங்கள் வெறும் பொழுதுபோக்கு அம்சத்திற்காக மட்டுமில்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் யோசிக்க வைப்பதோடு, இவர்களின் ஆளுமைத்திறன் மற்றும் மூளையின் செயல்திறன் எந்த அளவிற்கு உள்ளது என அர்த்தம். இதுபோன்ற ஒளியியல் மாயைப் புகைப்படங்களை நீங்கள் இனி பார்க்க நேர்ந்தால் நீங்கள் மட்டுமில்லாது உங்களுடைய நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து புதிர் விளையாட்டை விளையாட ஆரம்பியுங்கள். நிச்சயம் அனைவருக்கும் உபயோகமாகவே இருக்கும்.

First published:

Tags: Optical Illusion, Trending, Viral