Home /News /trend /

”வாழ்க்கைக்கு திருமணம் அருமருந்தாம்”- மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.. வைரல் சம்பவம்

”வாழ்க்கைக்கு திருமணம் அருமருந்தாம்”- மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்.. வைரல் சம்பவம்

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்..

மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ்..

Viral Invitation | 10 வருடங்கள் காதலித்த இவர்கள் மூன்று வருடங்களாக சிந்தித்து இதுபோன்ற திருமண அழைப்பிதழை தயார் செய்துள்ளதாக பேட்டியளித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tiruvannamalai, India
    மாத்திரை அட்டை வடிவில் திருமண அழைப்பிதழை அச்சிட்டு அனைவரது கவனத்தையும் திருவண்ணாமலை சேர்ந்த மணமக்கள் ஈர்த்துள்ளனர். இந்த ஐடியாவை கண்டுபிடிக்க ரூம் போட்டு யோசிச்சிருப்பாங்க போல என்பது போல் 10 வருடங்கள் காதலித்த இவர்கள் மூன்று வருடங்களாக சிந்தித்து இதுபோன்ற திருமண அழைப்பிதழை தயார் செய்துள்ளதாக பேட்டியளித்துள்ளனர்..மாப்பிள்ளைக்கு அவ்வளவு காதல்..

    திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் கிராமத்தைச் சேர்ந்தவர் எழிலரசன் இவர் திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருந்தியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரது தந்தை பலராமன், தாயார் கோவிந்தம்மாள். இவரது தந்தை பல வருடங்களாக வேட்டவலம் கிராமத்திலேயே அன்பு மெடிக்கல் என்ற பெயரில் மருந்து கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
    எழிலரசன் கடந்த 10 ஆண்டுகளாக கிராமத்தில் உள்ள வசந்தா என்பவரை காதலித்து வந்துள்ளார்.

    வசந்தா தனியார் செவிலியர் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும்  செப்டம்பர் 5ஆம் தேதி வேட்டவலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மணமக்கள் அனைவரது இல்லத்திற்கும் கொடுக்கக்கூடிய திருமண அழைப்பிதழை மாத்திரை அட்டை வடிவில் அனைவரையும் கவரும் வகையில் அச்சடித்து கொடுத்து வருகின்றனர்.

    Read More : இது கதவா ? காரா?.. ஆனந்த் மஹிந்திரா ட்விட்டரில் பகிர்ந்த வைரல் வீடியோ.!


    மாத்திரை அட்டை வடிவில் அச்சடிக்கப்பட்ட திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைதளங்களில் பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதுகுறித்து பேசிய மாப்பிள்ளை எழிலரசன், நானும் வசந்தாவும் எல்லோருக்கும் வித்தியாசமான அழைப்பிதழை கொடுக்க வேண்டும் என முடிவு செய்தோம். கடந்த 3 வருடங்களுக்கு முன்பாகவே மாத்திரை வடிவில் இருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டோம்.  குறிப்பாக மனிதனுக்கு அவ்வப்போது வரக்கூடிய உபாதைகளை தீர்க்கும் வகையில் ஒரு மாத்திரையை தேர்வு செய்ய வேண்டும் என எண்ணி அசிக்லோபெனாக் (ACECLOFENAC) என்ற மாத்திரையை கடைசியாக தேர்வு செய்தோம். இது போன்ற வடிவில் இருக்க வேண்டும் என கருதி பல நாள் காத்திருந்ததாக கூறியுள்ளார்..

    அழைப்பிதழை தற்பொழுது தயார் செய்து அனைவரிடத்திலும் கொடுத்து வருகிறோம். அனைவரது கவனத்தையும் இந்த திருமண அழைப்பிதழ் அட்டை ஈர்த்துள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் தங்களது திருமண அழைப்பிதழ் வைரலாகி உள்ளது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடத்திலும் இந்த திருமண அழைப்பிதழ் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார்.

    குறிப்பாக அசிக்லோ பெனாக் பாராசிட்டமல் மாத்திரை எவ்வாறு ஜுரம் வலி போன்ற நிவாரணிகளை குணப்படுத்துகிறதோ அது போன்று வாழ்க்கையில் அனைத்து இன்ப துன்பங்களையும், லாப நஷ்டங்களையும், நன்மை தீமைகளையும் உணர்ந்து விட்டுக்கொடுத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்திலேயே இதுபோன்ற திருமண அழைப்பிதழ் அட்டையை தாங்கள் தயாரித்ததாகவும் பிரகாச சிரிப்புடன் கூறியுள்ளார்.

    என்ன செய்வது இந்த காதல் படுத்துற பாடு என நினைத்து இவர்களை வாழ்த்துவதை தவிர வேறு வழியில்லை என நாம் நினைக்கும் நேரத்தில் பலர் அவர்களின் திருமண நாள் அழைப்பிதழுக்கான ஐடியாக்களை யோசித்துகொண்டிருந்தாலும் இருப்பார்கள்..
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: Thiruvannamalai, Trending, Viral

    அடுத்த செய்தி