ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

பதுங்கி பாய்ந்து மானை பிடித்த சிங்கம்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..வைரல் வீடியோ..

பதுங்கி பாய்ந்து மானை பிடித்த சிங்கம்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்..வைரல் வீடியோ..

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

சிங்கத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மான் செய்த சுறுசுறுப்பான எதிர்வினை பல இணைய பயனர்களை திகைக்க வைத்துள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  "தி டார்க் சைட் ஆஃப் நேச்சர்" என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட சிங்கத்தின் வேட்டை பற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.

  பொதுவாக சிங்கத்துக்கும் மற்ற மிருகங்களுக்கும் இடையே நடக்கும் மோதல், காட்டு ராஜாவான சிங்கத்திற்கே சாதகமாக முடியும். ஆனால் சில சமயங்களில், இந்த வைரல் வீடியோவில் உள்ளது போல, சிங்கத்தின் தாக்குதலில் இருந்து மிருகங்கள் அதன் தந்திர செயலால் தப்பி செல்வதும் உண்டு. அப்படி ஒரு வீடியோ தான் இப்போது வைரலாகி வருகிறது.

  அந்த வீடியோவில் மான் ஒன்று லாவகமாக சிங்கத்தின் பிடியில் இருந்து தப்பி ஓடுகிறது. சிங்கத்தின் பிடியிலிருந்து மான் தப்பி ஓடும் காட்சி காண்போரை திகைக்க வைக்கிறது. மானின் விடா முயற்சி மற்றும் தைரியத்தால் அது போராட்டத்திற்கு பிறகு உயிர்தப்பி காட்டுக்குள் ஓடிவிட்டது.

  Read More : தாவுடா.. தாவு! ரயில் சீட்டுக்காக ஸ்பைடர் மேனாக மாறிய பலே பயணி! வைரல் வீடியோ!

  ஒரு சிறிய குளத்திலிருந்து தண்ணீர் குடித்துக்கொண்டிருந்த மான் மீது சிங்கம் பாய்வது போன்ற தொடக்க காட்சியில் வீடியோ தொடங்குகிறது. மான், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, அதன் வளைந்த கொம்புகளைப் பயன்படுத்தி சிங்கத்தை அதன் முதுகிலிருந்து அகற்றுகிறது. பின்னர் சிங்கம் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் முயற்சியில் குளத்தில் குதிக்கிறது.


  சிங்கத்திடம் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மான் செய்த சுறுசுறுப்பான எதிர்வினை பல இணைய பயனர்களை திகைக்க வைத்துள்ளது. மேலும் அந்நிகழ்வே தலைகீழாக மாறி சிங்கம் நீரில் குதித்து ஓடுவதும் பலரால் பேசுப்பொருளாகி வருகிறது. இந்த வீடியோ ட்விட்டரில் அக்டோபர் 2 அன்று பகிரப்பட்டுள்ளது.மேலும் இது ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் 72,000 க்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral Video