ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

சிறுமியுடன் தோனி கொஞ்சிப்பேசும் க்யூட் வைரல் வீடியோ!

சிறுமியுடன் தோனி கொஞ்சிப்பேசும் க்யூட் வைரல் வீடியோ!

சிறுமியுடன் கொஞ்சிப்பேசும் தோனி. (Video Grab)

சிறுமியுடன் கொஞ்சிப்பேசும் தோனி. (Video Grab)

MS Dhoni spotted playing with little girl | ராஞ்சியில் ஓய்வு எடுத்து வரும் தோனி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • News18
 • 1 minute read
 • Last Updated :

  எனக்கு வீடு இல்லை, பேருந்தில் தான் குடியிருக்கிறேன் என ‘தல’ தோனி, ஒரு சிறுமியுடன் கொஞ்சிப் பேசும் க்யூட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

  இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 விதமான தொடர்களில் விளையாடி வருகிறது. ஏற்கனவே, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முன்னாள் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான மகேந்திர சிங் தோனி, இந்திய டி-20 அணியில் சேர்க்கப்படவில்லை.

  Dhoni Play Tennis
  டென்னிஸ் விளையாடும் தோனி (Twitter)

  மோசமான பேட்டிங் பார்ம் காரணமாக டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து தோனி கழற்றி விடப்பட்டார். இந்திய அணியில் இவருக்கு இடம் கொடுப்பது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

  இதைப் பற்றிக் கவலைப்படாத தோனி, ஓய்வு நேரத்தை தனது சொந்த ஊரான ராஞ்சியில் கழித்து வருகிறார்.

  அவ்வப்போது, தோனியும், அவரது மகள் ஸிவாவும் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும். அதேபோல், தோனி ஒரு சிறுமியுடன் கொஞ்சிப்பேசும் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

  இந்த வீடியோவில், “நான் பேருந்தில் குடியிருக்கிறேன், எனக்கு வீடு இல்லை.” என தோனி கூறுகிறார். மீண்டும் வீடு எங்கே உள்ளது என சிறுமி கேட்க, எனது வீடு வெகுதொலைவில் உள்ளது என அவர் தெரிவித்தார்.
   
  View this post on Instagram
   

  Main bus me hi rehta hoon 😂 #Msdhoni


  A post shared by Sakshi Singh Dhoni FC 🍓 (@_sakshisingh_r) on  ராஞ்சியில் ஓய்வு எடுத்து வரும் தோனி, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இதனை அடுத்து, 2019 உலகக் கோப்பையில் அவர் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

  Also Watch...

  Published by:Murugesan L
  First published:

  Tags: MS Dhoni, Trending, Ziva Dhoni