Home /News /trend /

வீட்டில் உணவு சமைத்து விற்பனை செய்யும் அம்மா - 25 ஆண்டு கால சேவைக்கு குவியும் பாராட்டு!

வீட்டில் உணவு சமைத்து விற்பனை செய்யும் அம்மா - 25 ஆண்டு கால சேவைக்கு குவியும் பாராட்டு!

வீட்டில் உணவு சமைத்து விற்பனை செய்யும் அம்மா

வீட்டில் உணவு சமைத்து விற்பனை செய்யும் அம்மா

Trending: வீட்டு சாப்பாடு விற்பனை செய்து வரும் பெண்மணி தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார்.

நம் அனைவருக்குமே வழக்கமான வீட்டு உணவை தவிர்த்துவிட்டு, வாரத்தில் ஒரு நாள் அல்லது மாதத்தில் ஏதேனும் சில நாட்கள் ரெஸ்டாரன்ட், ஹோட்டல் போன்ற இடங்களுக்கு சென்று விதவிதமான உணவுகளை சாப்பிடுவது என்றால் அலாதிப் பிரியம் தான். ஆனால், நம் மீது அன்பு கொண்ட அம்மாவும் சரி, சமூக அக்கறை கொண்ட மருத்துவர்களும் சரி, ஹோட்டல் மற்றும் ரெஸ்டாரண்ட் உணவுகள் உடல்நலனுக்கு தீங்கானது என்பதை அவ்வப்போது நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருப்பார்கள்.

ஹோட்டல் உணவுகளில் எக்கச்சக்கமான மசாலா, அஜினமோட்டோ, நிறமூட்டிகள் போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதே, அதைத் தவிர்க்க வேண்டும் என்று பலரும் கூறுவதற்கு காரணம்.

எப்போதாவது ஹோட்டல் அல்லது ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடுபவர்களுக்கு ஒன்றும் பெரிய அளவுக்கு பிரச்சினை இல்லை. ஆனால், வீட்டை விட்டு வெளியூர்களில் தங்கி படிக்கும் மாணவர்கள், பணிபுரியும் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கட்டாயம் வெளியே சாப்பிட வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இதையும் படியுங்கள் : லாட்ஜில் தோழியுடன் தங்க மனைவியின் ஆதார் அட்டையை வழங்கிய ஜகஜால கில்லாடி!

இதனால்தான், தினசரி வெளியிடங்களில் சாப்பிடும் சூழலில் இருப்பவர்கள் பலர், வீட்டு முறை சாப்பாடு என்ற போர்டு மாட்டி வைக்கப்பட்டுள்ள சின்ன சின்ன மெஸ் மற்றும் உணவகங்களை பெரிதும் தேடிச்சென்று சாப்பிடுவார்கள். இங்கு மசாலா, காரம் உள்ளிட்டவை மிதமான அளவில் வீட்டில் பயன்படுத்தப்படுவதை போன்றே இருக்கும் என்பதே இதற்கு காரணமாகும்.

அப்படியொரு வீட்டுமுறை சாப்பாடு விற்பனை செய்து வரும் பெண்மணிதான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளார். வெறும் பேச்சுக்கு வீட்டுமுறை சாப்பாடு என்று போர்டு எழுதி வைக்காமல், நிஜமாகவே வீட்டிலேயே உணவுகளை தயார் செய்கிறார் இந்த அம்மா.

உணவு தயாரிக்கவும், அதனை விற்பனை செய்யவும் ஒரு நாளில் 15 மணி நேரத்திற்கு மேலாக உழைக்கிறார் இவர். சமைக்கப்பட்ட உணவுகள் அனைத்தும் சூடு ஆறி விடாமல் ஹாட் பாக்ஸில் எடுத்து வைத்து, ஆட்டோ மூலமாக மார்க்கெட் பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

இதையும் படியுங்கள் : தெருக்களில் இருந்து சிகரெட் துண்டுகளை எடுக்க காகங்களுக்கு பயிற்சி அளிக்கும் ஸ்வீடன் நிறுவனம்!

குருகிராமில் உள்ள ஹூடா மார்க்கெட்டில் நண்பகல் ஒரு மணி முதல் மாலை 6 மணி வரையிலும் இவரது கடை செயல்படுகிறது. சுத்தமான, சுகாதாரமான, சாப்பாடு அதுவும் நாவிற்கு இதமான அசைவ சாப்பாடு என்பதால், அங்கு குவியும் வாடிக்கையாளர்களுக்கு குறைவே இருக்காது. அதுவும் அம்மா சமையலில் தயாரான கோழிக்கறியை பார்க்கையில் நமக்கே சாப்பிட தோன்றுகிறது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்

  
View this post on Instagram

 

A post shared by Gaurav Wasan (@youtubeswadofficial)


இந்த சமையல் தொழிலை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்த அம்மா மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் இவரை குறித்த தகவல்கள் இன்ஸ்டாகிராமில் வெளியானது. இந்த வீடியோவை இதுவரை சுமார் 1.4 மில்லியன் மக்கள் பார்த்துள்ளனர். சுமார் 141k லைக் வந்துள்ளது

இதையும் படியுங்கள் : ப்பா... இந்த வயசிலும் இப்படியொரு எனர்ஜியா?... கிரிக்கெட் விளையாடி கலக்கிய முதியவர்!

வீடியோவுக்கு கீழே கமெண்ட் செய்யும் நெட்டிசன்கள் ஒவ்வொருவரும் இந்த உணவை கட்டாயம் வாழ்க்கையில் ஒருமுறையாவது ருசித்து விட வேண்டும் என்று ஆர்வத்துடன் பதிவிடுகின்றனர். கடவுள் இந்த அம்மாவை ஆசீர்வதித்து, நீண்ட ஆயுளுடன் வைத்திருக்க வேண்டும் என்று பலரும் வாழ்த்தி வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Instagram, Trending, Viral Video

அடுத்த செய்தி