இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் விசித்திரமான காணக்கூடிய பல விஷயங்கள் உள்ளன, மேலும் மக்கள் அவற்றைப் பற்றிய ஆச்சரியங்களை அறிந்து கொள்ள ஆர்வமாகவும் இருக்கும். சில நேரங்களில் இவை விலங்குகளின் வடிவத்தில் இருக்கும். சில நேரங்களில் அந்த விலங்குகள் விசித்திரமான அமைப்பு காரணமாக பார்க்க விநோதமாக இருக்கும். மேலும் சில சமயங்களில் அந்த உயிரினங்கள் தொடர்பான இயல்புகள் விசித்திரமாக இருக்கும். சமீபத்தில், தென்னாப்பிரிக்காவின் கடற்கரைக்கு இதே போன்ற உயிரினம் வந்துள்ளது. அதையடுத்து அங்குள்ள மக்களிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது.
தென்னாப்பிரிக்காவின் கொம்மெட்ஜியில் உள்ள கடற்கரையில் வாக்கிங் சென்ற மக்கள், அங்குள்ள அரிய வகை மீன் வகையை சேர்ந்த உயிரினத்தைக் கண்டு திகைத்துப் போனதாக டெய்லி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்க்விட், ஆக்டோபஸ் போன்ற உயிரினங்கள் கடலின் ஆழத்தில் காணப்படுகின்றன என்று உங்களுக்குச் சொல்வோம். ஸ்கவிட் என்பது அரிய வகை மீன் உயிரினங்களை குறிக்கும். இவை அந்த நாட்டிற்கு ஏற்ப பல வடிவங்களிலும், விசித்திரமாகவும் காணப்படுவது வழக்கம்.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட் இந்த அரிய வகை மீன் உயிரினத்தின் நீளம் 11 அடி வரை இருந்தது. அறிக்கையின்படி, 44 வயதுடைய பெண் ஒருவர் உயிரினத்தைப் பற்றி அறிந்ததும், அவர் தனது மகன்களுடன் அதனை பார்க்கச் சென்றார். அருகில் சென்று பார்த்ததும் அந்த உயிரினம் இவ்வளவு பெரியதாக இருக்கும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று கூறினார். அதனுடைய பற்கள் ரேஸர்களைப் போல கூர்மையாக இருப்பதாக அவன் சொன்னான். இந்த உயிரினங்களின் மேற்பரப்பு மிகவும் கூர்மையாக இருப்பதை அவர் கண்டுபிடித்தார், ஏனெனில் அவை திமிங்கலங்களிலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றுகின்றன. இந்த வகை ஸ்க்விட்கள் 43 அடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
Also Read : குழந்தையின் தலை எங்கே..? உங்க கண்ணுக்கு தெரிகிறதா? குழப்பும் புகைப்படம்...
இருப்பினும் இந்த உயிரினங்கள் அமைதியான இயல்புடையவை, ஆனால் அவைகள் ஆபத்தை உணரும்போது சட்டென்று தாக்கும். அவற்றின் விஷம் நபரை எளிதில் கொன்றுவிடும். இந்த அரிய வகை மீன் இனம் இறந்தது வருத்தமாக இருப்பதாகவும், ஆனால் தானும் தன் குழந்தைகளும் தங்கள் வாழ்க்கையில் முதல்முறையாக இதுபோன்ற உயிரினத்தைப் பார்த்ததில் மகிழ்ச்சி அடைவதாகவும் அந்தப் பெண் கூறினார். பல நேரங்களில் மீனவர்கள் அரிய வகை மீன்களை விற்று பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மீன்வகை, படகின் மீது மோதி இறந்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப்பட்டது. அந்த உயிரினத்துக்கு 2 வயதுதான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.