சாதாரண தோசை மாவைக் கொண்டு பல்வேறு விதமான தோசைகளை செய்வதை நாம் பார்த்திருப்போம். ரெஸ்டாரண்ட், ரோட்டோர கடைகள், தள்ளுவண்டி கடைகள் முதற்கொண்டு பல கடைகளில் தோசையை விதவிதமாகவும் வித்தியாசமாகவும் நாம் சாப்பிட்டிருப்போம். ஆனால் மும்பை மங்கல்தாஸ் மார்க்கெட்டில் உள்ள ஸ்ரீபாலாஜி கடையில் சுடப்படும் தோசை பற்றியும் அது எப்படி உங்கள் தட்டிற்கும் வரும் என்பதை பற்றியும் உங்களால் கொஞ்சமும் யோசித்து பார்க்க முடியாது.
ஸ்ட்ரீட் ஃபுட் ரெசிபீஸ் என்ற பேஸ்புக் பக்கத்தில் கடந்த வாரம் ஒரு ஷேர் செய்யப்பட்டது. அதில் உங்கள் தட்டிற்கே தோசை பறந்து வருகிறது. இந்த பறக்கும் தோசை வீடியோ 8 கோடியே 40 லட்சம் பேரால் கவனம் பெற்றுள்ளது. மேலும் 13 லட்சம் பேர் இந்த வீடியோவிற்கு லைக் போட்டுள்ளனர். விறுவிறுப்பாக தோசை கல்லில் தோசை சுடும் இளைஞர் நேரடியாக அதனை வாடிக்கையாளரின் தட்டுக்கே வீசுகிறார்.
அரிசி மாவை அரைத்து தோசை கல்லில், மாவை ஊற்றி, அதில் வெங்காயம் சேர்த்தால் வெங்காய தோசை, மசாலாவை சேர்த்தால் மசால் தோசை என பல்வேறு வகையில் தோசையை மக்கள் கண்டுபிடித்து சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் தற்போது சோசியல் மீடியாவில் இந்த பறக்கும் தோசை தான் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வாடிக்கையாளர்களை கவர இப்படி செய்தாலும், சிலர் உணவுக்கு அவமரியாதை என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கு நெட்டிசன்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்துள்ள நிலையில் அவற்றில் சில,
“அட்டகாசமான அந்த பையன் வாடிக்கையாளர்களுக்கு தோசையை பரிமாற அதை வானில் பறக்க விடுகிறார்” என்று ஒரு பேஸ்புக் யூசர் கருத்து தெரிவித்திருந்தார்.
“அவர் உணவை பரிமாறுவதில் கூட சில கலையை பின்பற்றுகிறார்” என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ : இந்த ஒரு ரெசிபி உடல் எடையை குறைக்குமா..? நீங்களும் டிரை பண்ணி பாருங்க..காலை உணவாகவும் சாப்பிடலாம்..!
இன்னும் சிலரோ "இது உணவிற்கு அவமரியாதை மற்றும் கலங்கத்தை ஏற்படுத்தும் இது தேவையற்றது" என்று கூறினர். அதற்கு "இது அவர்களின் வியாபாரத்தை இன்னும் பிரபலப்படுத்த ஒரு யுக்தி தான்" என்று மற்றொரு யூசர் கூறினார். இருப்பினும் இந்த தோசை விற்பனையாளரை பலர் விமர்சித்தனர்.
தோசைகளை காற்றில் வீசுவது என்பது உணவுக்கு அவமரியாதையை ஏற்படுத்தும் ஒரு செயலாகும். மேலும் இது ஒரு சுகாதாரமற்ற ஒரு செயலாக உள்ளது. இதனால் காற்றில் உள்ள அழுக்குகள்/கிருமிகள் தோசையில் ஒட்டிக்கொள்ளும் என ஒருவர் கூறியுள்ளார்.