ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இவ்வளவு பெருசா... மீனவர்களை மிரள வைத்த பிரம்மாண்ட மீன் - வைரல் வீடியோ!

இவ்வளவு பெருசா... மீனவர்களை மிரள வைத்த பிரம்மாண்ட மீன் - வைரல் வீடியோ!

வைரலாகும் பெரிய மீன்

வைரலாகும் பெரிய மீன்

ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்வு குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • interna, Indiaportugal

மண்ணிலும், விண்ணிலும் மறைந்திருக்கும் விந்தைகளை விட அதிகமாகவே கடல் தன்னுள் அதிசயங்களையும், ஆச்சர்யங்களையும் புதைத்து வைத்திருக்கிறது. என்ன தான் அதனை அறிந்து கொள்ள விஞ்ஞானிகள் முயன்றாலும், சில மட்டும் எதிர்பாராத நேரத்தில் வெளிப்பட்டு மக்களுக்கு மிகப்பெரிய பிரம்மிப்பை கொடுக்கின்றன. இதற்கு திடீரென திமிங்கலங்கள் கரை ஒதுங்குவது, ராட்சத அளவிலான மீன்கள் மீனவர்களின் வலையில் சிக்குவது, அடையாளம் தெரியாத கடல் வாழ் உயிரினங்கள் மனிதர்கள் கண்களில் படுவது என பல உதாரணங்கள் உள்ளன. அப்படியொரு ஆச்சர்யப்பட வைக்கும் நிகழ்வு குறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

போர்ச்சுகல் நாட்டில் தீவுக்கூட்டங்கள் நிறைந்த அசோர்ஸ் பகுதியில் உள்ள ஃபையல் என்ற தீவின் கடற்கரைப் பகுதியில் ராட்சத அளவிலான மீன் ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரிய மீன் என அழைக்கப்படும் இது தான், இதுவரை உலகிலேயே கண்டறியப்பட்ட அதிக எடை கொண்ட எலும்புள்ள மீன் என கடல்சார் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த மீன் டிசம்பர் 2021ம் ஆண்டு இறந்து கரை ஒதுங்கிய நிலையில், கடந்த ஓராண்டாக விஞ்ஞானிகள் இதுகுறித்து ஆய்வு நடத்தி வந்துள்ளனர்.

இதனையடுத்து தற்போது சூரிய மீன் பற்றிய ஆய்வு முடிவுகள் ஜர்னல் ஆஃப் ஃபிஷ் பயாலஜியில் வெளியிடப்பட்டுள்ளது. பார்க்கவே மிரளவைக்கும் தோற்றம் கொண்ட இந்த பிரம்மாண்ட மீனின் அறிவியல் பெயர் மோலா அலெக்ஸாண்ட்ரினி என்பதாகும். பொதுவாக இது பம்ப்-ஹெட் சன்ஃபிஷ், ராம்சேயின் சன்ஃபிஷ் அல்லது தெற்கு கடல் சன்ஃபிஷ் என்றும் அழைக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இறந்து கரை ஒதுங்கிய இந்த ராட்சத மீனின் எடை 6 ஆயிரத்து 049 பவுண்ட்கள் அல்லது 3 டன்கள் (2,744 கிலோ) என குறிப்பிடப்பட்டுள்ளது. ராட்சத சூரிய மீன், 12 அடி (3.6 மீட்டர்) உயரமும், சுமார் 11 அடி (3.5 மீட்டர்) நீளமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : புகைபிடிக்கும் பறவையா..! இணையத்தை அசர வைக்கும் பறவையின் வைரல் வீடியோ

இந்த ஆய்வினை, அட்லாண்டிக் நேச்சுரலிஸ்ட் என்ற அறக்கட்டளையுடன் இணைந்து கடல்சார் விஞ்ஞானியான ஜோஸ் நுனோ கோம்ஸ்-பெரேரா என்பவர் மேற்கொண்டுள்ளார். ராட்சத அளவிலான சூரிய மீனை கண்டறிந்தது, இதுபோன்ற பெரிய அளவிலான உயிரினங்களுக்கு புகலிடம் அளிக்கும் அளவிற்கு கடல் இன்னும் ஆரோக்கியமாக இருப்பதை சுட்டிக்காட்டினாலும், கடல் மாசு மற்றும் கப்பல் போக்குவரத்து கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்தாக உள்ளதை மறுப்பதற்கில்லை என்றும் அட்லாண்டிக் நேச்சுரலிஸ்ட் அமைப்பு தெரிவித்துள்ளது.

' isDesktop="true" id="821084" youtubeid="OH3c7Gjroog" category="trend">

மேலும் இறந்து கரை ஒதுங்கிய சூரிய மீனின் தலையில் பெரிய அளவிலான காயம் இருப்பதைக் கண்டறிந்துள்ள விஞ்ஞானிகள், மீன் காயம் காரணமாக இறந்ததா? அல்லது கரை ஒதுங்கிய பின்னர் காயம் ஏற்பட்டதா? என்பதை மட்டும் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னதாக 1996 ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கமோகாவா என்ற இடத்தின் தென்பகுதியில் 2300 கிலோ எடையும் 272 சென்டி மீட்டர் நீளமும் கொண்ட சூரிய மீன் கண்டறியப்பட்டது, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending Video, Viral Video